அனல் மின்நிலைய விரிவாக்க பணி டெண்டர் முறைகேடு..  சிபிஐ விசாரணை கேட்குது பெல் தொழிற்சங்கம்

0

அனல் மின்நிலைய விரிவாக்க பணி டெண்டர் முறைகேடு..  சிபிஐ விசாரணை கேட்குது பெல் தொழிற்சங்கம்

சென்னை எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க பணிக்காக 560 மெகா உற்பத்தி திறன் கொண்ட கூடுதல் அலகை அமைக்க தமிழ்நாடு மின்வாரிய உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டான்ஜெட்கோ) கடந்த 2019 ஆம் ஆண்டு டெண்டர் கோரியது.

https://businesstrichy.com/the-royal-mahal/

இதில் பங்கேற்ற மத்திய அரசின் பெல் நிறுவனம் ரூ.4, 957.11 கோடிக்கும், பிஜிஆர் நிறுவனம் ரூ.4,442.75 கோடிக்கும் டெண்டர் கோரியது. இதில் பிஜி ஆர் நிறுவனத்திற்கு டெண்டர் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் டெண்டர் மொத்த தொகையில் 10% வங்கி உத்தரவாதமாக 30 நாட்களில் செலுத்த வேண்டும் என்ற டெண்டர் நிபந்தனைகளின்படி, அந்தத் தொகையை பிஜிஆர் நிறுவனம் செலுத்தாததால் டெண்டர் ஒதுக்கீட்டு உத்தரவை ரத்து செய்து டான்ஜெட்கோ கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து பிஜிஆர் நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் மீண்டும் டெண்டர் கோரக்கூடாது. தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்று இடைக்கால உத்தரவை பிறப்பித் தது. இந்நிலையில் ரத்து செய்யப்பட்ட டெண்டரை மீண்டும் பிஜிஆர் நிறுவனத்திற்கு வழங்கி டான்ஜெட்கோ கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது. இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. டெண்டர் நிபந்தனைகளின் படி 30 நாட்களில் வங்கி உத்தரவாதத்தை பி ஜிஆர் செலுத்தவில்லை என்றால் டெண்டரில் பங்கேற்று அடுத்த இடத்தில் உள்ள பெல் நிறுவனத்துக்கு தான் அந்த டெண்டரை டான்ஜெட்கோ வழங்கி இருக்க வேண்டும்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ஆனால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் இந்த டென்டரை அதே பிஜிஆர் நிறுவனத்திற்கு வழங்கியது சட்ட விரோதமானது. ஏற்கனவே இந்த திட்டத்தை அமல்படுத்துவதில் மூன்றாண் டுகள் கால தாமதம் ஏற்பட்டுள்ளதால் டான்ஜெட்கோவிற்கு பெருத்த இழப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது டெண்டர் நிபந்தனைகளை மீறி பிஜிஆர் நிறுவனத்திற்கு இந்த டெண்டர் முறைகேடாக வழங்கப் பட்டிருப்பதால் இதை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் திருச்சி, ராணிப்பேட்டை, திருமயம் பெல் நிறுவன தொழிற்சங்கங்கள் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்ததில் தமிழக அரசு மற்றும் டான் ஜெட்கோ தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் இந்த வழக்கை தொடர பெல் நிறுவன தொழிற்சங்கங்களுக்கு அடிப்படை உரிமை இல்லை. டெண்டர் ஒதுக்கீட்டில் எந்தவித விதிமீறல்களும் நடைபெறவில்லை. அதுபோன்ற புகார்கள் கூறப்பட்டால் விசாரிக்க தமிழக போலீஸ் உள்ளது. சிபிஐ விசாரணைக்கு அவசியம் இல்லை என்று வாதிட்டார்.

அப்போது மனுதாரர் தரப்பில் இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்று கேட்கப்பட்டது. தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 21ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தர
விட்டனர்.

– உறையூர் ரவி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.