ஏமாற்றத்தை தந்த பாஜக தேர்தல் அறிக்கை !
காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கைக்குப் பதில் சொல்லும் விதத்தில் பாஜக தேர்தல் அறிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏமாற்றத்தைத் தருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு ! முக்கிய அம்சங்கள் !
சங்கல்ப் பத்ரா என்ற பெயரில் பாஜக வெளியிடப்பட்டிருக்கும் இந்த தேர்தல் அறிக்கையில் பல அதிரடியான அறிவிப்புகள் இடம் பெற்று இருக்கின்றன. புதிய அஸ்திரத்தையும் பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்திருக்கிறது.
முத்ரா திட்டத்திற்கு கடனுதவி 20 லட்சமாக உயர்வு, 70 வயது மேற்பட்டவர்களுக்கு ஐந்து லட்சம் மருத்துவ காப்பீடு உள்ளிட்ட திட்டங்களோடு, வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற எண்ணத்தில் பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டிருப்பதாகவும் மோடியின் கேரண்டி 2024 என்ற பெயரில் இந்த தேர்தல் அறிக்கையானது வெளியிடப்பட்டிருக்கிறது. நான்கு திசைகளை நோக்கியும் புல்லட் ரயில் உள்ளிட்ட பல்வேறு எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள் இதில் இடம் பெற்று இருக்கின்றன. ஒரே நாடு தேர்தல் நாடு: பாஜக தனது ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் ஒரு அதிரடியான விஷயத்தை செயல்படுத்துவது வழக்கம். அந்த வகையில் இந்த அறிக்கையிலும் ஒரு அதிரடியான அறிவிப்பு இடம் பெற்று இருக்கிறது. அது ஒரே நாடு ஒரே தேர்தல்.
இது தொடர்பாக மோடி வெளியிட்ட பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-
தமிழ் மொழியை கௌரவிக்கும் விதமாக திருவள்ளுவர் பண்பாட்டு மையம் அமைக்கப்படும்.2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடத்த நடவடிக்கை.70 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் பயனடைய ஏற்பாடு.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இலவச ரேஷன் நீட்டிப்பு. 80% தள்ளுபடி விலையில் மக்கள் மருந்தகங்களில் மருந்துகள் கிடைக்க நடவடிக்கை. முத்ரா யோஜனா கடன் திட்டத்திற்கான உச்ச வரம்பு ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும் என்பவை உள்ளிட்ட பல முக்கிய வாக்குறுதிகள் பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கைக்குப் பதில் சொல்லும் விதத்தில் பாஜக தேர்தல் அறிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல், வந்தே பாரத், புல்லெட் இரயில் வசதிகள் ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பு ஏமாற்றத்தைத் தருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆதவன்