அங்குசம் சேனலில் இணைய

அங்குசம் பார்வையில் ‘பாம்’   

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தயாரிப்பு : ‘ஜெம்ப்ரியோ பிக்சர்ஸ்’ சுதா சுகுமார், சுகுமார் பாலகிருஷ்ணன். டைரக்‌ஷன் : விஷால் வெங்கட், ஆர்ட்டிஸ்ட் : அர்ஜுன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர், நாசர், காளிவெங்கட், சிங்கம்புலி, அபிராமி, பாலசரவணன், டி.எஸ்.கே., பூவையார், கிச்சா ரவி, ரோஹன் காவ்யா, கதை-திரைக்கதை : மணிகண்டன் மாதவன், அபிசேக் சபரிகிரிசன், விஷால் வெங்கட், ஒளிப்பதிவு : பி.எம்.ராஜ்குமார், இசை : டி.இமான், எடிட்டிங் : ஜி.கே.பிரசன்னா, வசனம் : பி.எம்.மகிழ்நன், ஆர்ட் டைரக்டர் : மனோஜ்குமார், பி.ஆர்.ஓ. : சதீஷ் [ எய்ம் ]  தனது பேத்தியைத் தூங்க வைக்க பாட்டி கதை சொல்கிறார்.

பாம்

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

எழுபது-எண்பது  வருசத்துக்கு முன்னால ஒரு மலையடிவாரத்துல காளக்கம்மாய்பட்டின்னு ஒரு கிராமம் இருந்துச்சு. அங்க இருந்த ஜனங்கலெல்லாம் தாயா, புள்ளையா, அண்ணன் –தம்பியா ஒத்துமையா வாழ்ந்தாங்க. ஒரு நாள் ராத்திரி திடீர்னு அந்த மலையிலிருந்து பெரிய பாறாங்கல் ஒண்ணு உருண்டு வந்து அந்தக் கிராமத்துல விழுந்து ரெண்டா உடைஞ்சது. பெரிய கல்லையும் சின்ன கல்லையும் கடவுளா நினைச்சு தனித்தனியா கும்பிட ஆரம்பிச்சாக மக்கள். இதுக்குப் பிறகு தான் ஓஞ்சாமி பெருசா, ஏஞ்சாமி பெருசான்னு சண்டை வர ஆரம்பிச்சது, சாதியும் தலை தூக்குச்சு. காளக்கம்மாய்பட்டியா ஒரே ஊரா இருந்தது, இப்ப காளப்பட்டி, கம்மாப்பட்டின்னு ரெண்டாகிப் போச்சு.   அப்ப ஆரம்பிச்ச சாதிச்சண்டை இப்ப வரைக்கும் ஓஞ்சபாடில்ல” இப்படிச் சொல்லி முடிக்கிறார் பாட்டி.  டைரக்டர் விஷால் அப்பவே நம் கவனம் ஈர்க்க ஆரம்பித்துவிட்டார்.

பரமு

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

சிங்கம்புலி ஒரு ஊருக்குத் தலைவராக இருக்கிறார். அங்கே இருப்பவர்கள் உயர்சாதிக்காரர்கள். அர்ஜுன் தாஸ், காளிவெங்கட், ஷிவாத்மிகா ஆகியோர் இன்னொரு ஊரில் இருக்கும் கீழ்சாதிக்காரர்கள். அப்பப்ப இவர்களுக்குள் உரசல்கள், சண்டைகள், சச்சரவுகள் வந்துக்கிட்டே இருக்கு. அந்த மக்களிடையே கொளுந்துவிட்டு எரியும் சாதித் தீயை அணைக்க அந்த ஊருக்கு வருகிறார் கலெக்டர் மணியம்மாள் [ அபிராமி ]. இந்தப் பேர் சனாதன வெறியர்களுக்கு சாவு மணி அடிக்கும் பேர் என்பதை க்ளைமாக்ஸில் நச்சுன்னு சொல்லியிருக்கார் டைரக்டர் விஷால் வெங்கட்.

மணியம்மாளின் சமாதான முயற்சி நடந்துக்கிட்டிருக்கும் போதே கதிர்[ காளிவெங்கட் ] இறந்துவிடுகிறார். ஊருக்கு வெளியே ஆலமரத்தடியில் அவரின் உடலை இரவு  வைத்துவிட்டு  மறுநாள்  நல்லடக்கம் செய்ய மக்கள் நினைக்கும் போது, ‘ட்ட்ர்ர்ர்ர்ர்….’ சத்தம் காளிவெங்கட்டின் உடலிலிருந்து வெளியே வந்ததும் அதிர்ச்சியாகிறார்கள் மக்கள். சோவி போட்டுப் பார்க்கும் பூசாரியும் சாமியே வந்துவிட்டதாகவும் 48-ஆவது நாளில் ஜோதி தெரிந்த பின் தான் அடக்கம் செய்ய முடியும் எனச் சொல்கிறார்.   ஜோதி தெரிந்ததா? சாதித் தீ அணைந்ததா? என்பதன் க்ளைமாக்ஸ்தான் இந்த ‘பாம்’.  முரட்டு வில்லன், ஒரு டைப்பான எடிட்டிங் என வெரைட்டியாக வெளுத்துக் கட்டும் அர்ஜுன் தாஸ், இதில் அச்சு அசல் கிராமத்து இளைஞனாக மாடுகளுக்கு லாடம் கட்டும் தொழிலாளியாக, படம் முழுக்க கைலி, சட்டையுடன் வந்து கவனம் ஈர்க்கிறார். படத்தில் அர்ஜுன் தாஸுக்கு வசனங்கள் ரொம்ப ரொம்ப கம்மி தான். அதிலும் இடைவேளை வரை மொத்தமே நாலு பக்க வசனம் தான் அவருக்கு.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

ஆனால் இடைவேளைக்குப் பின்பு நடிப்பதற்கு நல்ல ஸ்பேஸ் கிடைத்து அதை அருமையாக பயன்படுத்தியுள்ளார். இடைவேளை வரை குடிகாரர் காளிவெங்கட்டை தோளில் சுமக்கிறார். அதற்குப் பின்பு கதையை தனது தோளில் சுமக்கிறார். படம் முடிய அரை மணி நேரத்திற்கு முன்பு காளிவெங்கட் உடல் இருக்கும் அந்த வெட்டவெளி மைதானத்தில் சம்மணமிட்டு உட்கார்ந்து, டெட்பாடியையே பார்ப்பது, க்ளைமாக்ஸில் முகத்தில் குங்குமத்தைப் பூசிக் கொண்டு, கைகளில் வளையல் அணிந்து கொண்டு சாமி ஆடி மக்களிடையே இருக்கும் சாதிப் பேயை சாகடிப்பதுன்னு கதைக்கு உரிய உயிர் கொடுத்துள்ளார். என்ன ஒண்ணு தீயைப் பார்த்தால் அவருக்கு ஏன் ஆவேசம் வருகிறது? என்பதைத் தெளிவுபடுத்தவில்லை டைரக்டர். அர்ஜுன் தாஸின் தாயும் சாதி வெறியால் தான் தீக்கிரையானார் என்பதை நம்மால் ஓரளவுக்குத் தான் அனுமானிக்க முடிகிறது.

பரமு

ஷிவாத்மிகா ராஜேசகர் மிகமிக பொருத்தமான செலக்‌ஷன். பாவாடை, சட்டையுடன் அப்பாவி கிராமத்து பெண்ணாக, காளிவெங்கட்டின் தங்கச்சியாக மனதில் நிற்கிறார் ஷிவாத்மிகா. குறிப்பாக க்ளைமாக்ஸில் “எங்க அண்ணன் செத்துப் போச்சு, ஆனா அவரோட ஆசை செத்துப் போகல” என கண்கலங்கும் இடத்தில் நம்மை கலங்கடித்துவிட்டார் ஷிவாத்மிகா.

இந்த ‘பாம்’மின் முக்கியமான மூலப்பொருள் என்றால் அது காளிவெங்கட் தான். சாதிப்பகையை வேரறுக்க நினைக்கும் கருப்புச் சட்டைக்காரராக மனுசன்  பின்னிப் பெடலெடுத்துவிட்டார். மனிதர்களிடம் பேசிப் பேசி சலிச்சுப் போய் எருமை மாடுகளிடம் பேசும் சீனிலும், ”உடைந்து போன பாலத்தைக் கட்டிக் கொடுத்தீங்கன்னா, உடனே சாதிப் பகை ஒழிஞ்சுரும்னு சொல்ல வரல.  அதுல எல்லாரும் நடக்க ஆரம்பிச்ச பிறகு கொஞ்சம் கொஞ்சமா பகை மறையும்னு சொல்றேன்” என கலெக்டர் அபிராமியிடம் பேசும் சீனிலும் ஜொலிக்கிறார் காளிவெங்கட், உதவியிருக்கிறார் வசனகர்த்தா மகிழ்நன். சீனியர் சிங்கம்புலியின் அனுபவ நடிப்பு, யூடியூப்பராக பாலசரவணனின் “கண்டதையும் கண்டெண்டாக்குவோம், கண்டெண்டை காசாக்குவோம்”, டி.எஸ்.கே.தம்பதிகள் என அனைவருமே திரையில் பளிச்சிடுகிறார்கள். அந்த பூசாரி கேரக்டரையும் சும்மா சொல்லக் கூடாது.

பாம்மலையடிவார கிராமம், காளிவெங்கட் உடல் இருக்கும் ஆலமரம் என ஆர்ட் டைரக்டர் ம்னோஜ்குமாரின் ஐடியா, சாதி மேகம் சூழ்ந்திருக்கும் வரை அந்தக் கிராமத்தை கிரே & பிளாக் ஷேடில் காண்பித்து அசத்திவிட்டார் கேமராமேன் பி.எம்.ராஜ்குமார். படத்தின் பிற்பகுதிக் கதையும் காட்சிகளும் டி.இமானின் பின்னணி இசையால் உயிரோட்டமாக இருக்கின்றன. ஆதிக்க சாதியினர் காலில் சூடு வைத்த பூவையார், க்ளைமாக்ஸில் அனைவரின் தோளில் ஏறி பூச்சட்டியை எடுப்பது, கை இழந்த ஒரு சிறுவனின் கையுடன் கைசேர்க்கும் ஒரு சிறுமி என அண்டச்சபிலிட்டிக்கு எதிராக டைரக்டர் விஷால் வெங்கட்டின்  ‘டச்’ அபாரம்.  மனிதர்கள் கண்டுபிடித்த கடவுள்களால் தான் மதமும் சாதியும் உருவாகி, அதுவே வெறியாகி மக்களின் நிம்மதியைச் சூறையாடுகிறது என்பதை நேர்மையுடன் சொல்லி, சனாதன வெறியர்களின் தலையில் ஒன்றரை டன் சுத்தியலால் ஓங்கியடித்துள்ள டைரக்டர் விஷால் வெங்கட்டின் இந்த ‘பாம்’ மனிதம் விரும்பும் சமூக நீதிக்கானது.

 

—   ஜெடிஆர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.