” இப்போது உயிரோடிருக்கிறேன்” நூல் அறிமுக விழா!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சி களம் இலக்கிய அமைப்பு சார்பில் மத்திய பேருந்து நிலையம் ” ஹோட்டல் ப்ளாஸமில்” எழுத்தாளர் இமையத்தின்

” இப்போது உயிரோடிருக்கிறேன்” நூல் அறிமுக விழா 19.04.2025 அன்று நடைபெற்றது.

Srirangam MLA palaniyandi birthday

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக “வானம் ” கலை இலக்கியமன்றத்தைச் சார்ந்த, பிரியங்கா பாரதியும், எழுத்தாளர் திரைப்பட இயக்குநர் திரு.பாஸ்கர் சக்தியும், நூல் குறித்து விரிவாகப் பேசினர்.

எழுத்தாளர் இமையம் தன் ஏற்புரையில், “சொற்கள் வழி காலம் தன்னை வரைந்து கொள்வதே இலக்கியம்” என்றார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

எழுத்தாளர் திரைப்பட இயக்குநர் திரு.பாஸ்கர் சக்தி
எழுத்தாளர் திரைப்பட இயக்குநர் திரு.பாஸ்கர் சக்தி

சங்ககாலம், சங்கம் மருவிய காலம், பக்தி இலக்கியம், உரைநடைக் காலம் பற்றி எல்லாம் விரிவாகப் பேசிய அவர், எழுத்தாளர் சாகலாம், எழுத்து சாகாது, தமிழ் மொழி என்றும் அழியாது எனக் கூறினார்.

வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிவிடும் எம்.எல்.ஏ. !

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

திருச்சியில் தான் பயின்ற பள்ளிக்கூடங்கள்:

  1. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
  2. நவீனா புத்தக நிலையம்

இவைதான் ரஷ்ய, மார்க்ஸிய மற்றும் நவீன இலக்கியங்களை தனக்கு அறிமுகப்படுத்தியதாகக் குறிப்பிட்டார்.

நூல் அறிமுக விழா முன்னதாக, இவ்விழாவிற்கு டாக்டர் C . சேகர் தலைமை ஏற்க, திரு. அரு.சுப்பரமணியன் அனைவரையும் வரவேற்றார்.

களம் அமைப்பின் திரு.துளசிதாசன் பேச்சாளர்கள் மற்றும் எழுத்தாளர் இமையம் பற்றி அறிமுக உரை நிகழ்த்த, திரு.ஜெயபால் நன்றி நவில நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

 

*ஸ்ரீகாந்த் திருச்சி*

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.