மூளையை சலவை செய்கிறாரா பார்த்திபன் ? — ‘டீன்ஸ்’ பட புதுமைகள் !

பலபேர் பலரை மூளைச் சலவை செய்வார்கள். ஆனால் இராதாகிருஷ்ணன் பார்த்திபனோ, தனது ஒவ்வொரு படத்திற்கும் தனது மூளையையே சலவை செய்து கொள்கிறார்.

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மூளையை சலவை செய்கிறாரா பார்த்திபன் ? — ‘டீன்ஸ்’ பட புதுமைகள் !

லகிலேயே முதல் முறையாக திரையரங்குகளில் தணிக்கை சான்றிதழுடன் முதல் பார்வை வெளியிடப்பட்டு சாதனை படைத்த இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் முற்றிலும் மாறுபட்ட, குழந்தைகளை மையமாகக் கொண்ட சாகச த்ரில்லரான ‘டீன்ஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் சென்னை கமலா திரையரங்கில் ஏப்ரல் 06-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

டிரெய்லரை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்ட நிலையில், ‘டீன்ஸ்’ திரைப்படத்தின் இசை சென்னை அதே திரையரங்கில் நான்கு காட்சிகளாக தொடர்ந்து வெளியிடப்பட்டு புதிய உலக சாதனையை படைத்துள்ளது. இதை தொடர்ந்து, ஒரே நாளில் ஒரே இடத்தில் அதிக இசை வெளியீட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட படம் என்பதற்கான சான்றிதழ் ‘டீன்ஸ்’ திரைப்படத்திற்கு உலக சாதனைகள் சங்கத்தால் வழங்கப்பட்டது. பதிமூன்று குழந்தைகளை மையமாகக் கொண்ட கதை என்பதால் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 13 இளம் வயதினருக்கு விழா மேடையில் படக்குழு பாராட்டி , கெளரவித்தது.

கால்டுவெல் வேள்நம்பி, டாக்டர் பாலசுவாமிநாதன், டாக்டர்.பின்ச்சி ஸ்ரீநிவாசன், ரஞ்சித் தண்டபாணி மற்றும் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். பயாஸ்கோப் டிரீம்ஸ் எல். எல். பி மற்றும் அகிரா புரொடக்சன்ஸ் பேனரில் ‘டீன்ஸ்’ தயாராகியுள்ளது. கீர்த்தனா பார்த்திபன் அக்கினேனி இதன் கிரியேட்டிவ் தயாரிப்பாளர்.
‘டீன்ஸ்’ திரைப்படத்தை தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் (கோயம்புத்தூர் தவிர) சக்திவேலனின் சக்தி பிலிம் பேக்டரி வெளியிடுகிறது, கோயம்புத்தூர் வெளியீட்டு உரிமையை எல்மா பிக்சர்ஸ் என். எத்தில்ராஜ் பெற்றுள்ளார்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

இத்திரைப்படத்திற்காக இசை அமைப்பாளர் D. இமான் மற்றும் ஒளிப்பதிவாளர் காவ்மிக் ஆரி ஆகியோருடன் முதல் முறையாக இராதாகிருஷ்ணன் பார்த்திபன் இணைந்துள்ளார். ஆர். சுதர்சன் படத்தொகுப்பை கையாண்டுள்ளார்.

‘டீன்ஸ்’ இசை வெளியீட்டு விழாவில் பேசியவர்கள்.

விழாவில் பாராட்டுப் பெற்ற 13 இளம் சாதனையாளர்களின் சார்பாக இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரம்,
“எங்களை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து கௌரவித்த பார்த்திபன் அவர்களுக்கு மிக்க நன்றி. ‘டீன்ஸ்’ திரைப்படம் பற்றிக் கூற வேண்டும் என்றால் இது பார்த்திபனின் கனவு. அவரும் இசையமைப்பாளர் டி இமான் அவர்களும் முதல் முறையாக இணைந்துள்ளார்கள். பாடல்களை கேட்டேன், மிகவும் அருமையாக உள்ளன. உங்கள் அனைவரைப் போன்று நானும் இத்திரைப்படத்தை திரையரங்குகளில் காண ஆவலாக உள்ளேன்.”

நடிகை பூர்ணிமா பாக்யராஜ், “அனைத்தையும் புதுமையாக செய்பவர் பார்த்திபன். ‘டீன்ஸ்’ திரைப்படத்தையும் அவ்வாறே உருவாக்கியுள்ளார். இதன் டிரெய்லர் மற்றும் பாடல்கள் மிகவும் சிறப்பாக உள்ளன. பார்த்திபனுக்கும் அவரது குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.”

படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான டாக்டர் பின்ச்சி ஸ்ரீநிவாசன்,”நான் ஒரு குழந்தைகள் மருத்துவர். குழந்தைகளை மையப்படுத்திய ‘டீன்ஸ்’ திரைப்படத்தின் கதையை பார்த்திபன் எங்களிடம் சொல்லும் போதே நான்கு தயாரிப்பாளர்களுக்கும் மிகவும் பிடித்திருந்தது. சொல்லப்போனால் இத்திரைப்படத்தில் 13 டீன் ஏஜர்கள் உடன் பணியாற்றியதால் பார்த்திபன் இன்னும் இளமையாக, அவர்கள் அனைவரின் உற்சாகத்தையும் தன்னகத்தே கொண்டு திகழ்கிறார். இசையமைப்பாளர் இமான் மிக அருமையான பாடல்களை இத்திரைப்படத்திற்கு தந்துள்ளார். சிறுவர்கள் மட்டுமில்லாது அனைத்து தரப்பினரும் பார்த்து ரசிக்கக்கூடிய இத்திரைப்படம் அனைவரின் ஆதரவையும் பெற்று வெற்றி பெறும்”.

கவிஞர் மதன் கார்கி,”தமிழ் சினிமாவுக்கு ஒரு புதுமையான படைப்பாக ‘டீன்ஸ்’ இருக்கும். பார்த்திபன் சார் இந்த கதையை என்னிடம் விவரிக்கும் போதே அவ்வளவு புதுமையாக இருந்தது. படத்தில் பணியாற்றிய இளம் கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.”

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார்,”புதுமை என்றாலே பார்த்திபன் தான். குழந்தைகளை வைத்து படம் எடுப்பது என்பது அத்தனை சுலபமான விஷயம் இல்லை. ஆனால் பார்த்திபன் அதை சாதித்து காட்டியுள்ளார். கடின உழைப்பாளியும் இறைபக்தி அதிகம் கொண்டவருமான இமான் இனிமையான பாடல்களை இப்படத்திற்கு வழங்கி உள்ளார்”.

நடிகை வனிதா விஜயகுமார்,”என்னுடைய மகள் பார்த்திபன் சாரிடம் அசிஸ்டெண்டாக பணிபுரிகிறார் என்பது மிகவும் பெருமையான விஷயம். டிரெய்லரை பார்த்த உடனேயே இது கட்டாயமாக திரையரங்குகளில் பார்த்து ரசிக்க வேண்டிய திரைப்படம் என்பது புரிகிறது. இதில் நடித்துள்ள குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து கலைஞர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள்.”

இயக்குநர் கௌரவ் நாராயணன்,” சாதனை மேல் சாதனைகளாகப் படைத்து இளம் இயக்குநர்களுக்கு உற்சாகமாகவும் போட்டியாகவும் திகழ்கிறார் பார்த்திபன் .’அஞ்சலி’க்கு பிறகு இத்தனை சிறுவர்கள் நடித்துள்ளது ‘டீன்ஸ்’ திரைப்படத்தில் தான் என்று நினைக்கிறேன்”.

சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் “ஒரு திரைப்படத்தின் விநியோக உரிமையை வாங்கும்போது அதை எவ்வாறு புரொமோஷன் செய்ய வேண்டும் என்று நான் யோசித்து திட்டமிடுவது வாடிக்கை. ஆனால் பார்த்திபன் சார் திரைப்படத்திற்கு அவ்வாறு எதுவும் செய்ய தேவை இல்லை. எங்களை விட சிறப்பாக அவரே அனைத்து விதமான புரொமோஷன்களையும் செய்து கொண்டிருக்கிறார். இப்படம் கண்டிப்பாக வெற்றி அடையும்.”

நடிகர் விதார்த்”படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ‘டீன்ஸ்’ திரைப்படத்தின் வெற்றி விழாவில் நிறைய பேசுகிறேன்.”

இயக்குநர் சரண் “பார்த்திபன் சார் எப்போதும் உணர்ச்சி வசப்பட மாட்டார். உணர்ச்சி தான் அவர் வசப்படும். ‘டீன்ஸ்’ படத்தின் மூலம் ஒரு ஹாலிவுட் திரைப்படத்தையே தமிழுக்கு அவர் வழங்கியுள்ளார்”.

நடிகர் ரோபோ சங்கர்,”புதுமைகளின் பிறப்பிடம் பார்த்திபன் சார். அவர் என்ன செய்தாலும் வித்தியாசமாக இருக்கும். அதிலும் ‘டீன்ஸ்’ திரைப்படம் மிகவும் புதிதாக உள்ளது. குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்.”

நடிகர் யோகி பாபு,”பார்த்திபன் சார் உடன் பணியாற்ற வேண்டும் என்று நீண்ட நாட்களாக அவரிடம் கேட்டு வந்தேன். இறுதியாக ‘டீன்ஸ்’ படத்தில் அந்த ஆசை நிறைவேறி உள்ளது. அவருடன் இன்னும் நிறைய திரைப்படங்களில் பணியாற்ற ஆவலாக உள்ளேன். நன்றி.”

இயக்குனர் & நடிகர் கே பாக்யராஜ்,”நாளைய சூப்பர் ஸ்டார்களாக வளரப்போகும் ‘டீன்ஸ்’ படத்தில் நடித்துள்ள 13 இளம் கலைஞர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் வாழ்த்துகள். என்னுடன் உதவி இயக்குநராக பணிபுரிந்த பார்த்திபன் இவ்வளவு பெரிய உயரத்தை தொட்டு இருப்பது மிகவும் பெருமை. எப்போதுமே வித்தியாசமாகவும் புதுமையாகவும் சிந்திப்பவர் பார்த்திபன். அவரது இந்த ‘டீன்ஸ்’ திரைப்படம் மாபெரும் வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன், நன்றி.”

நடிகர் தம்பி ராமையா,” எதைச் செய்தாலும் புதுமையாக செய்யும் பார்த்திபன், பதிமூன்று முத்துக்களை இப்படத்தில் நடிக்க வைத்துள்ளார். அவர்கள் அனைவரும் நாளைய திரை வானில் சிறகடித்து பறக்க போவது உறுதி”.

இசையமைப்பாளர் டி. இமான் பேசும்போது “இப்படி ஒரு இசை வெளியீட்டு விழாவை இதுவரை நான் பார்த்ததில்லை. அதற்காக பார்த்திபன் சாருக்கு நன்றி. இப்படத்தில் புதுமையான விஷயங்களை நிறைய முயற்சித்துள்ளோம். முதலில் ஒன்று அல்லது இரண்டு பாடல்கள் போதும் என்று இருந்த நிலையில் தற்போது அது ஏழு பாடல்களாக வளர்ந்துள்ளது. பார்த்திபன் சாரும் நானும் எப்போதோ இணைந்து பணியாற்றி இருக்க வேண்டியது, அது இப்போதுதான் கைகூடி உள்ளது. அவருடன் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவம், நன்றி.” கமலா திரையரங்கின் வாசலில் ஆரம்பித்த பார்த்திபனின் புதுமைச் சிந்தனைகள், விழா முடிந்த பிறகும் நம்ம சிந்தனைக்குள் தாக்கம் ஏற்படுத்தியது. பலபேர் பலரை மூளைச் சலவை செய்வார்கள். ஆனால் இராதாகிருஷ்ணன் பார்த்திபனோ, தனது ஒவ்வொரு படத்திற்கும் தனது மூளையையே சலவை செய்து கொள்கிறார்.

மதுரை மாறன்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.