ஹாட் ஸ்பாட் சக்சஸ் மீட்டில் ‘ஹாட் ஸ்பாட் -2’ அறிவிப்பு !

ஒரு படத்தின் நெகட்டிவை மட்டுமே காட்டி டிரெய்லர் வெளியிட்ட ஒரே டீம் நாங்க தான். ஆனால் படம் பார்த்த பிறகு மக்கள் தந்த ஆதரவுக்கு மகிழ்ச்சி.

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஹாட் ஸ்பாட் சக்சஸ் மீட்டில் ‘ஹாட் ஸ்பாட் -2’ அறிவிப்பு!

யக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியிருந்த’ஹாட் ஸ்பாட்’ மார்ச் 29 ஆம் தேதி வெளியானது.இப்படம் திரையரங்குகளில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் இப்படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்தது. இதில் பத்திரிகை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

அங்குசம் இதழ்.. இலவசமாக படிக்க...

இவ்விழாவினில்..இசையமைப்பாளர் வான் “விக்னேஷ் கார்த்திக் அண்ணாவிற்கு முதல் நன்றி. ஒரு ஷார்ட் ஃபிலிம் பார்த்து என்னால் இது முடியும் என நம்பி, என்னை அழைத்து வாய்ப்பு தந்ததற்கு நன்றி”.

நடிகர் திண்டுக்கல் சரவணன் பேசியதாவது. “பிரஸ் பீப்பிள் படம் பார்த்து எனக்கு போன் செய்து பாராட்டினார்கள். ரொம்ப சந்தோஷமாக இருந்தது”.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

கே.ஜே.பி. டாக்கீஸ் நிறுவனத்தின்  பாலமணிமார்பன் பேசும் போது, “இன்றைய அளவில் மக்கள் இந்தப்படத்தைப் பற்றிப் பேசுகிறார்கள் பாராட்டுகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் பத்திரிகையாளர்கள் தான். உங்களுக்கு நன்றி. விக்னேஷ் ஷார்ட்ஃபிலிம் எடுக்கும் காலத்திலிருந்து தெரியும். விக்னேஷை சுற்றி வேலை பார்க்கும் அனைவரும் மிக அர்ப்பணிப்போடு வேலை பார்ப்பார்கள்”.

சிக்ஸர் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தினேஷ் கண்ணன் பேசியதாவது “மக்களிடம் இந்தப்படம் பேசப்படக் காரணமே பத்திரிகையாளர்கள் தான். எங்கள் படத்துடன் 11 படங்கள்வெளியானது. அது மிகப்பெரிய பிரஷரைத் தந்தது, ஆனால் மக்கள் எங்கள் படத்தை அரவணைத்துக் கொண்டார்கள்.

நீங்கள் இன்னும் கொஞ்சம் பாராட்டினால் இந்த வாரமும் இந்தப்படம் ஓடும் நன்றி” செவன் வாரியர்ஸ் சுரேஷ்குமார் பேசும் போது, “இந்தப்படம் வெற்றி பெறக்காரணம் பிரஸ்& மீடியா தான்.  விக்னேஷ் என் தம்பி மாதிரி. ஷார்ட்ஃபிலிம் காலத்திலிருந்து தெரியும். ஒரு படத்தின் நெகட்டிவை மட்டுமே காட்டி டிரெய்லர் வெளியிட்ட ஒரே டீம் நாங்க தான். ஆனால் படம் பார்த்த பிறகு மக்கள் தந்த ஆதரவு மகிழ்ச்சி. என்னிடம் நாலு கதை சொன்னார் விக்னேஷ். அதில் ஏன் இரண்டு கதை எடுக்கவில்லை, படத்தின் பேர் மாற்றினார் அதையும் என்னிடம் கேட்கவில்லை.இப்போது அவரிடம் கேட்காமல் ஒன்று சொல்கிறேன்”எனக் கூறிய தயாரிப்பாளர்,விக்னேஷ் கார்த்திக்கிற்கு அடுத்த படத்திற்கான அட்வான்ஸ் செக்கைத் தந்து அசத்தினார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

நடிகர் சுபாஷ்,”பிரஸ் ஷோ முடிந்ததும் உங்களின் கைதட்டல் தான் இந்த வெற்றிக்குக் காரணம். உங்கள் அனைவருக்கும் நன்றி”.

நடிகை சோபியா பேசும் போது, “டிரெய்லர் லாஞ்சில் நடந்த நெகட்டிவ் கமெண்டால் நிறைய பயந்தேன். ஆனாலும்என்னைத் தேற்றிக்கொண்டேன். எங்கள் டீம் எந்த இடத்திலும் படத்தை விட்டுக்கொடுக்கவில்லை. படத்திற்கு நீங்கள் தந்த பாஸிட்டிவ் ரிவ்யூ தான் படத்தை வெற்றிபெறச் செய்தது”.

நடிகை ஜனனி ஐயர்,”ஒரு படம் பெரிய படமா?, சின்னப் படமா? என பாரபட்சம் காட்டாமல், படம் நன்றாக இருந்தால் பாராட்டி, அதை ஜெயிக்க வைக்க உங்கள் ஆதரவைத் தருகிறீர்கள், உங்களுக்கு நன்றி. இயக்குநர் விக்னேஷுக்கு நன்றி.

கதை கேட்டதிலிருந்து ஷூட்டிங் வரை, அவரை நிறைய டார்ச்சர் செய்துள்ளேன். ஆனால் பொறுமையாக இருந்து, என்னை நம்புங்கள் என ஆதரவு தந்து, இந்தப்படத்தை எடுத்தார்.  இந்தப்படத்தை நல்லமுறையில் எடுத்துச் சென்ற தயாரிப்பாளர்களுக்கு நன்றி”.

இறுதியில் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் பேசியது,”இப்படம் சூப்பர் ஹிட்டானதற்கு மிக முக்கிய காரணம் நீங்கள் தான். பிரஸ் மீட்டில் அவ்வளவு நெகட்டிவிடி பரவிய பிறகு, பிரஸ் ஷோவின் போது, மிகப்பதட்டமாக இருந்தேன். ஆனால் நீங்கள் கைதட்டிப் பாராட்டியது உண்மையிலேயே மிக சந்தோசமாக இருந்தது. நல்ல படம் என்றால் நீங்கள் ஆதரவு தருவீர்கள் என்பது இதன் மூலம் நிரூபணமானது.

இன்னொரு வேண்டுகோள், திரையரங்கில் இப்போது படம் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் வார நாட்களில் தியேட்டர் ஹவுஸ்ஃபுல் ஆனால் தான் அடுத்த வாரம் ஷோ தருகிறார்கள்.ஆனால் வார நாட்களில் பெரிய ஹீரோக்ளுக்கே கூட்டம் வராது. இந்த நிலை மாற வேண்டும். நீங்கள் ஆதரவு தந்தால் அடுத்த வாரமும் படம் ஓடும். எல்லோருக்கும் நன்றி. அடுத்த வருடம் ‘ஹாட் ஸ்பாட் 2’ வோடு, எங்கள் குழுவோடு உங்களைச் சந்திக்கிறோம் நன்றி”.

இதே தயாரிப்பு நிறுவனம், விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஹாட்ஸ்பாட் 2 உருவாகவுள்ளதை இந்த வெற்றி விழாவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

மதுரை மாறன்

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.