அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

40 கிலோ கஞ்சா கடத்தல்! தப்பி ஓடிய குற்றவாளி கைது!

கஞ்சா கடத்தல் வாலியா் கைது

திருச்சியில் அடகு நகையை விற்க

திருச்சிராப்பள்ளி மாவட்டம். சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புங்கனூர் கிராமத்தில் உள்ள குமரன் பேக்கரி அருகே நேற்று (06.09.2025) மாலை 03:00 மணியளவில் திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர்  ஞானசேகரன்  தலைமையில் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது திருச்சியிலிருந்து ராம்ஜிநகரை நோக்கி சென்ற TN 21 AQ 2552 என்ற பதிவெண் கொண்ட வோல்க்ஸ்வாஜென் காரினை தடுத்து நிறுத்தி சோதனை செய்த  போது மேற்படி காரினை ஓட்டி வந்த நரேந்திரன் @ நரேன் 25/25, S/o தணிகாசலம், காந்தி நகர், ராம்ஜி நகர் என்பவர் தப்பி ஓட முயன்றவரை காவலர்கள் பிடித்து காரினை சோதனை செய்ய போது காரில் 40 கிலோ கஞ்சா (மதிப்பு ரூ.4,00,000/-) போதை பொருளினை விற்பனைக்காக கடத்தி சென்றுள்ளார்.

நரேந்திரன்
நரேந்திரன்

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

மேற்படி எதிரி நரேநத்தினை  விசாரணை செய்த போது தான் ஆந்திரா மாநிலத்திலிருந்து 44 கிலோ கஞ்சாவை எடுத்து வந்து திருச்சி நம்பர் 1 டோல்கேட்டில் காரினை நிறுத்தி அனிதா, க.பெ. கார்த்திகேயன். பிச்சாண்டார்கோவில், மண்ணச்சநல்லூர் தாலுகா என்பவரிடம் 2 கிலோ கஞ்சாவினையும், 2) புவனேஸ்வரி. க.பெ தணிகாசலம், பிச்சாண்டார்கோவில், மண்ணச்சநல்லூர் தாலுகா என்பவரிடம் 2 கிலோ கஞ்சாவினையும் விற்பனைக்காக கொடுத்துவிட்டு வந்ததாக கூறியதின் பேரில் மேற்படி எதிரியான நரேந்திரன் என்பவரை கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டதுடன், மற்ற இரண்டு எதிரிகளான புவனேஸ்வரி மற்றும் அனிதா ஆகிய இருவரையும் திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் தேடி வருகிறனர்.

மேலும், இது போன்ற அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா, குட்கா மற்றும் பிற போதை பொருட்களை கடத்தி செல்லும் நபர்கள் மீதும், விற்பனை செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப.,  எச்சரித்துள்ளர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.