ஓட்டுக்குத் துட்டு – பெட்டியோடு சிக்கிய பாஜக !
நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் தேர்தல் செலவுக்காக ரூ.3.99 கோடி கொண்டு செல்லப்பட்டதாக போலீசார் தரப்பில் தகவல்
ஓட்டுக்குத் துட்டு – பெட்டியோடு சிக்கிய பாஜக !
நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று ரூ.3.99 கோடி பணம் சிக்கியது. அது நெல்லை தொகுதி பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு கொண்டு செல்லப்பட்ட பணம் என போலீசார் விசாரணையில் தெரியவந்தது
சென்னையில் இருந்து நெல்லைக்கு நேற்று இரவு புறப்பட்டு சென்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பணம் கொண்டு செல்வதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.தகவலின் பெயரில் தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்த பறக்கும்படையினர் மற்றும் தாம்பரம் போலீசார் ரயிலில் அதிரடி சோதனை செய்தனர்.
அப்போது ரயிலில் மூன்று பைகளுடன் இருந்த மூவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்து பார்த்தப்போது அதில் கட்டு கட்டாக பணம் இருந்தது இதனைத் தொடர்ந்து அவர்கள் மூன்று பேரையும் பிடித்த போலீசார் பண மூட்டைகளுடன் தாம்பரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்ததில் அவர்களிடம் ரூ.3.99 கோடி பணம் மற்றும் பாஜக உறுப்பினர் அட்டைகள் வைத்திருந்ததும் தெரிய வந்தது.
மேலும் அந்த பணம் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் தேர்தல் செலவுக்காக கொண்டு செல்லப்பட்டதாக விசாரணையில் பிடிபட்ட மூன்று பேரும் தெரிவித்ததாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து போலீசார் பிடிபட்ட நபர்களிடம் பணத்தை யாரிடம் இருந்து எந்த பகுதியில் இருந்து பெற்று வந்தார்கள் என்றும், பணத்தை யாரிடம் ஒப்படைக்க இருந்தார்கள் என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக தமிழ்நாட்டில் நெல்லை பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மட்டுமே வெற்றி பெறுவார் என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியம் சுவாமி பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்
சமீபத்திய பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரத்தில் ஆரத்தி எடுத்தவர்களுக்கு அண்ணாமலையே பணம் கொடுத்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இரு தினங்களுக்கு முன்பு பேட்டி ஒன்றில் பாஜக வேட்பாளர்கள் அனைவரும் ஓட்டுக்கு, ஒரு ரூபாய் கூட கொடுக்க மாட்டோம் என்று அண்ணாமலை கூறியது குறிப்பிடத்தக்கது
கேஎம்ஜி