அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

வாப்பா தம்பின்னு … கூப்பிட்டது குத்தமா ?

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

37 வயதான முருகேசன் 22 வயதான தனுஷ் என்பவரை அறிமுகமான நபர் என்ற அடிப்படையில் சந்தித்த இடத்தில், ” வாப்பா தம்பி”! என்று வாய்விட்டு மரியாதையாக விசாரித்து இருக்கிறார்.

மரியாதை காட்டிய நபரை நீ ஒரு சக்கிலியன்! மறவன் என்னை தம்பி என்பதா? என்று தனுஷ் எனும் வீர மறவர் புறநானூற்று பீர்பாட்டிலை எடுத்து முருகேசன் அவர்களை தலையில் அடித்து படு காயப்படுத்தி இருக்கிறார்.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

இன்று முதல் தனுஷ் எனும் தறுதலை புதுக்கோட்டை பொன்னமராவதி தலையாலங்கானத்து செறுவென்ற வீரனாக வலம் வருவார்.

உள்ளூர் சமூக நீதி கட்சிகள் யார் பக்கம் நிற்கிறது என்று பார்ப்போம்!

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

2026 June 11 - 17 Angusam Book

மண்டல்கள் வந்து சாதியின் பெயரால் எத்தனை ஒதுக்கீடுகள் தந்தாலும், படிநிலை அமைப்பு முறையில் தனக்கும் கீழே உள்ள பட்டியல் சாதிகளை ஒதுக்குவதோடு ஒடுக்கும் இது போன்ற மென்டல்களை திருத்த வேண்டிய சமூகப் பொறுப்பு அந்த சாதியின் உழைக்கும் மக்களுக்கும் இருக்கிறது.

உடனடியாக இந்த சாதி வெறி கொலைகார நபரை கைது செய்து கடுமையாக தண்டிக்க வேண்டும்.

குடிவெறி மீட்பு மருத்துவ மையங்களை போல தமிழகத்தில் சாதி வெறி மீட்பு மருத்துவ மையங்களை அமைக்க வேண்டும்!

இது போன்ற சாதிய மென்டல்களை அங்கே வைத்து உழைக்கச் சொல்லித் திருத்த வேண்டும்!

—    துரை. சண்முகம்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.