சாப்பாட்டிலும் ஜாதி வேற்றுமையா?

” ஜாதி வித்தியாசத்தைப் பாராட்டாத குருகுலத்தினால்தான் ஏதாவது நமது தேசத்திற்கு நன்மை செய்ய முடியும். அதுதான் நமக்குத் தேவை. இந்த வித்தியாசம் தமிழ்க் குருகுலத்திலிருந்து வருகிறது. ஆகவே இந்த வித்தியாசம் இருக்கும்வரை இக்குருகுலம் தமிழ்நாட்டிலுள்ள பிராமணரல்லாதாரை இழிவுபடுத்திக் காண்பித்துக்கொண்டிருக்கும் ஒரு ஞாபகக் குறி என்று நான் கூற வேண்டியிருப்பதற்காக மிகவும் வருந்துகிறேன்.

அங்கே பிராமணரும் பிராமணரல்லாதாரும் வித்தியாசத்துடனேயே நடத்தப்படுகிறார்கள். சாப்பாட்டில் சகல வகுப்புகளையும் சேர்ந்த பிராமணர் ஒருபக்கமாகவும் சகல வகுப்புகளையும் சேர்ந்த பிராமணரல்லாதவர் ஒரு பக்கமுமாகவே இருந்து சாப்பிட வேண்டும். இதை நான் நேரில் அறிவேன் .

குருகுலத்தில் இவ்வித்தியாசம் கூடாது என்று நான் சொன்னேன். ஆனால் இந்த வேற்றுமையை ஒழிக்க முடியாதென்று ஐயர் [வ. வே. சு. ஐயர்] கூறினார். இதைக் கேட்டதும் நானும் ஸ்ரீமான் ஈ. வி. ராமசாமி நாயக்கர் போன்ற பிராமணரல்லாதாரும் திடுக்கிட்டுப்போனோம்.! ”

– 1924 ல் , தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராய் இருந்த வரதராஜுலு நாயுடு

– வழக்கறிஞர் சந்திரன் வீராசாமி

Comments are closed, but trackbacks and pingbacks are open.