அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

12 வயது குழந்தை மின்சாரம் தாக்கி பாதிப்பு ! தாய்கோவில் மின்வேலியால் பரபரப்பு !

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

திருச்சி மாவட்டம் துறையூர் ஆத்தூர் சாலையில் அமைந்துள்ள தாய்க்கோவில் எனும் தனிநபருக்கு சொந்தமான பிரமாண்டமான கட்டிடத்தை சுற்றிலும் மின்வேலி அமைக்கப்பட்டதால் துறையூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

துறையூர் நகராட்சி சொந்தமான மின் மயானம் அமைந்துள்ளது. தாய்க்கோயில் இதனை பிரபல தொழில் அதிபர் சுரேஷ்குமார் என்பவர் தனது தாயின் நினைவாக அறக்கட்டளை அமைத்து அதன் மூலம் இந்த தாய் கோயில் எனும் கட்டிடத்தை கட்டி பராமரித்து வருகிறார்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

இந்நிலையில் நேற்று இரவு துறையூர் நகர மன்ற திமுக உறுப்பினர் நித்யா கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மகள் அவரது தாய் உள்ளிட்டோர் அந்த பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது ஓய்வு எடுப்பதற்காக தாய் கோவிலின் ஓரத்தில் ஒதுங்கிய போது திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்டார்.

இதில் சுயநினைவு இழந்த 12 வயது பெண் குழந்தை துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

இது பற்றி தகவல் அறிந்த ஏராளமான பொதுமக்கள் சம்பவ இடத்தில் குவிந்தனர். மேலும் மின்வாரிய அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்த பொழுது உயர் அழுத்த மின்சாரம் வீட்டை சுற்றி இருப்பதை உறுதி செய்தனர்.

இதனை அடுத்து மின் இணைப்பை துண்டித்த பொழுதும் அதில் மின்சாரம் வந்துள்ளது. அப்பொழுதுதான் அந்த கட்டிடத்தில் மேலே சோலார் மின் இணைப்பு அமைக்கப்பட்டுள்ளது அதிலிருந்து மின்சாரம் பாய்வதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி வெளியே செல்வார்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இந்த கட்டிடத்தில் அருகில் உள்ள மயானத்தில் இறந்தவர்களின் காரியம் செய்வதற்காகவும் பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

இந்நிலையில் மின்சாரம் பாயும் நேரத்தில் இறந்தவர்களுக்கு திதி கொடுக்க வருபவர்கள் நிலைமை என்ன ஆவது என்ற அச்சமும் மரண பயமும் பொதுமக்கள் இடையே ஏற்பட்டுள்ளது.

இது பற்றி நகர்மன்ற உறுப்பினர் நித்யா கிருஷ்ணமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியார் கட்டிடத்தில் மின்சாரம் தாக்கி 12 வயது குழந்தை பாதிப்படைந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நகர்புற பகுதியில் இதுபோன்று மின்வேலிகள் அமைப்பது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் போக்குவரத்து மிகுந்த மாநில நெடுஞ்சாலையான துறையூர் ஆத்தூர் சாலையில் பிரபலமாக அமைந்துள்ள தாய் கோயிலுக்கு பார்வையாளர்கள் மற்றும் இறந்தவர்களுக்கு திதி காரியம் செய்பவர்கள் வந்து செல்லக்கூடிய இடத்தில் இவ்வாறு முன் அனுமதியின்றி சட்ட விரோதமாகஅதிக அளவிலான மின்சாரம் பாயக்கூடிய மின்வெலிகளை அமைத்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு இதனை கண்டித்து துறையூர் நகர்மன்ற உறுப்பினர்களான கார்த்திகேயன் சுதாகர் இளையராஜா நித்தியா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோருடன் பொதுமக்களும் சேர்ந்துதிடீர் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துறையூர் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.

மேலும் இவ்வாறு தாய் கோயிலில் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது இதனை யாரும் தொட வேண்டாம் என எவ்விதமான அறிவிப்பு பலகையும் தாய் கோயிலின் முன்புறமாக வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகள் தங்களது தோட்டத்தில் பயிரிடப்பட்ட விலை பொருட்களை காட்டு விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக வனத்துறை மற்றும் மின்வாரியத்தில் உரிய அனுமதி பெற்று குறைந்த அளவிலான மின்சாரம் பாயக்கூடிய மின்வேலியை அமைப்பது வழக்கம். ஆனால் நகர்ப்புற பகுதியில் இவ்வாறு சட்டவிரோதமாக பலரும் வந்து செல்லக்கூடிய பிரபலமான தாய்கோவிலில் சட்டவிரோதமாக மின்வேலியை அமைத்துள்ளது மிகவும் கண்டனத்துக்குரியது.  உடனடியாக மின்வேலியை அப்புறப்படுத்த வேண்டும் எனவும், மேலும் சட்ட விரோதமாக முன் அனுமதியின்றி மின்வெளியை அமைத்துள்ள தாய்க்கோயிலின் உரிமையாளரான சுரேஷ்குமாரை கைது செய்துநடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.