துத்தநாகத்தையே கரைக்கும் சக்தி !
நமது உடலில் இவ்வளவு விசயங்கள் இருக்கிறது தெரியுமா?
* காலின் பெருவிரல் இரண்டு எலும்புகளை கொண்டிருக்கும். ஆனால், மற்ற விரல்கள் ஒவ்வொன்றும் மூன்று எலும்புகளைக் கொண்டிருக்கும் .
* ஒரு மனிதனின் ஒரு ஜோடி பாதங்களில் 2,50,000 வியர்வை சுரப்பிகள் உள்ளன.
* மனிதனின் வயிற்றில் உள்ள செரிமான அமிலமானது துத்தநாகத்தையே கரைக்கும் சக்தி கொண்டது .
* ஒரு மனிதன் மூளையில் பிரிட்டானிகா தகவல் களஞ்சியத்தை போல் …… ஐந்து மடங்கு தகவல்களைச் சேமித்து வைக்க முடியும் .
* மார்பில் முடி இல்லாத ஆண்களுக்கு, மார்பில் முடியுள்ள ஆண்களை விட “ CIRRHOSIS ” (ஈரல் நோய்) என்ற நோய் தாக்கும் வாய்ப்பு அதிகம் .
* பற்களின் எனாமல் தான் மனித உடலில் உள்ள கடினமான பொருள் ஆகும் .
* கட்டை விரலின் நீளமும், மூக்கின் நீளமும் சமமாகும் .
* மனித கால்களில் ஒரு ட்ரில்லியன் வரையிலான பாக்டீரியாக்கள் உள்ளன.
— பேரா சா அருள்







Comments are closed, but trackbacks and pingbacks are open.