அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

போலீஸார் அரசியல் அடியாட்கள் அல்ல !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ள 41 FIR-கள் @tnpoliceoffl-ன் DVAC-ஆல் பதிவு செய்யப்பட்ட காலம் 2017-முதல் 2021 வரையிலான காலக்கட்டத்தில் பதியப்பட்டவை என்று அமலாக்கதுறை தன்னுடைய Affidavit-ல் கூறியுள்ளது. பிரமாணப்பத்திரத்தில் எந்த இடத்திலும் Party Fund என்ற வார்த்தையை ED குறிப்பிடவில்லை.

ஆனால், ED-ன் Affidavit பேரில் வழக்கு பதிவு செய்துள்ள DVAC குற்றம் நடந்த காலமென  2021-2025 வரை குறிப்பிட்டுள்ளது. அதோடு PARTY Fund என்ற வார்த்தையையும் மிகவும் உள்நோக்கத்தோடு  பதிவு செய்துள்ளது. அதே போல, பழைய அல்லது பாட்டில்களை விநியோகிக்கும் நிறுவனங்கள், போலியான ரசீதுகளை வழங்கியோ அல்லது ரசீதுத் தொகையை மிகைப்படுத்திக் காட்டியோ மதுபான உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து பணத்தைப் பெற்று, பின்னர், தங்கள் கமிஷன் தொகையைக் கழித்துக்கொண்டு, மீதமுள்ள பணத்தை அந்தந்த மதுபான உற்பத்தி நிறுவனங்களிடமே திருப்பி அளித்ததாக DVAC FIR-ல் குறிப்பிட்டுள்ள காலக்கட்டம் 2020 – 2025 வரை மட்டுமே.

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

டாஸ்மாக்அந்த மதுபான உற்பத்தி நிறுவனங்கள், விநியோக ஆர்டர்களைப் பெறுவதற்காக டாஸ்மாக் (TASMAC) அதிகாரிகளுக்கு லஞ்சம் (kickbacks) வழங்க அந்த பணத்தை பயன்படுத்தியதாக ED கூறியுள்ளதென DVAC,FIR-ல் தெரிவித்துள்ளது.

கவனிக்க வேண்டியது என்னவென்றால், அதே Affidavit-ல் 2013 முதல் 2020 வரையிலான காலத்திலும்  Devi Bottles LLP மற்றும் Subramaniam Bottles LLP and SNS Bottles Pvt Ltd நிறுவனங்கள் M/s Kals Distilleries-க்கு ரூ.300 கோடியை ரொக்கமாக வழங்கியுள்ளதாக ED கூறியுள்ளது.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

அந்த தொகையும் ஒப்பந்தம் பெறுவதற்காக டாஸ்மாக் அதிகாரிகளுக்கு லஞ்சமாக kickback பணம் என்றே ED கூறியுள்ளது. ஆனால், மிக லாவகமாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அந்த தரவுகளை FIR-ல் குறிப்பிடாமல் தவிர்த்துவிட்டது . ED-ன் Affidavit பேரில் FIR பதிவு செய்துள்ள DVAC சட்டமன்றத்தில் விஜய் Party Fund என்று கூறிய ஒரே காரணத்திற்காக, பட்ஜெட் கூட்டத்தொடரில் அதை நிரூபிக்கும் வகையில் CM அல்லது அமைச்சர்கள் பேச வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, Affidavit-ல் இருந்து தேவையான தரவுகளை மாத்திரம் எடுத்து பட்டிமன்ற பேச்சாளர் உரை போல FIR-ஐ பதிந்துள்ளது DVAC.

பி.ஆர். அரவிந்தாக்ஷன்
பி.ஆர். அரவிந்தாக்ஷன்

@tnpoliceoffl -ன் மிக முக்கியமான  புலனாய்வு ஏஜென்சி DVAC  ஒரு துறையின் மொத்த தவறுகளையும் கண்டறிந்து முறைகேட்டில் ஈடுபட்டோருக்கு தண்டனை வாங்கித்தர வேண்டிய கடமை DVAC-க்கு உள்ளது. DVAC சட்டத்திற்குட்பட்டு அதிகபட்ச நேர்மையோடு நடக்கும் துறை என உறுதியாக கூறுவேன். ஆனால், L&O மற்றும் CCB போல,அரசியல் அடியாள் தரத்திற்கு இந்த ஆட்சியில் கொஞ்சமும் நேர்மையற்று DVAC-யும் இறங்கியுள்ளது,மிகவும் அதிர்ச்சியூட்டுகிறது.

DVAC நிர்வாகத்தில் நேரடியாக, @CMOTamilnadu முதலமைச்சர் அலுவலகமோ அல்லது அமைச்சர்களோ தலையிடாமல் இப்படி எல்லாம் நடக்க நிச்சயம் வாய்ப்பே இல்லை. Political Goons போல போலீஸாரை பயன்படுத்துவதை இந்த அரசு நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

—   பத்திரிகையாளர் பி.ஆர். அரவிந்தாக்ஷன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.