கலைமகள் சபா ! எப்படி விண்ணப்பிப்பது ?

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

கலைமகள் சபா வழக்கு விவகாரத்தில், சற்றேறக்குறைய ஆறு இலட்சம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். கலைமகள் சபா தொடர்பான பிரதான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதியரசர்கள் அனிதாசுமந்த் மற்றும் சுந்தர்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக நடைபெற்று வருகிறது. இறுதியாக, கலைமகள் சபா தொடர்புடைய சொத்துக்களை பொது ஏலத்தில் விற்று, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு பிரித்துக் கொடுக்கும் நோக்கில், ஓய்வுபெற்ற நீதியரசர் எஸ்.எஸ்.சுந்தர் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. கலைமகள்சபா சங்கத்தின் தனி அலுவலராக தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஐ.ஏ.எஸ். தொடர்ந்து வருகிறார்.

தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுள் ஒரு பிரிவினர், ஒரு அடி நிலமாக இருந்தாலும் பரவாயில்லை நிலமாகவே பிரித்துக் கொடுக்க வேண்டுமென்ற கோரிக்கையை வலுவாக முன்வைத்து வருகிறார்கள். நிலமாகவோ, பணமாகவோ எந்த முறையில் தீர்வை பெறுவது என்ற வாதங்கள் ஒருபுறமிருக்க, உறுப்பினர்களின் தரவுகளை பதிவேற்றம் செய்வதில் கலைமகள் சபா நிர்வாகம் தனிக்கவனம் செலுத்தி வருகிறது.

எஸ்.எஸ்.சுந்தர்
எஸ்.எஸ்.சுந்தர்

ஏற்கெனவே, கலைமகள் சபா சங்கத்தின் சார்பில் வாங்கப்பட்ட சொத்துக்களின் ஆவணங்கள்;  கலைமகள் சபா உறுப்பினர்களின் பெயர்கள், உறுப்பினர் எண், அவர்கள் செலுத்திய சந்தா தொகை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. மேலும், உறுப்பினர்கள் பற்றிய விவரங்களை பதிவு செய்வதற்கென்று தனி இணையதளத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

ஏற்கெனவே, கலைமகள் சபா அலுவலகத்தில் பராமரிக்கப்படுகின்ற பதிவேடுகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்கும் பொருட்டு, தற்போதைய வங்கி கணக்கு விவரங்களுடன் உறுப்பினர்களை விவரங்களை பதிவேற்றம் செய்யுமாறு அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.

கலைமகள் சபா இணையதளத்தில் உறுப்பினர்கள் பற்றிய விவரங்களை எவ்வாறு பதிவு செய்வது என்பதை விரிவான வீடியோ பதிவாக அங்குசம் சார்பில் வெளியிட்டிருக்கிறோம்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

மேலும் விவரங்களுக்கு :

இணையதளம் : https://kalaimagalsabha.in/

தொலைபேசி எண்கள்: +91-9944098582 / +91-9944098572

மின்னஞ்சல் முகவரி :  kmsmembers1684@gmail.com

முழுமையான வீடியோவை காண 

கலைமகள் சபா ! எப்படி விண்ணப்பிப்பது ?

  —     அங்குசம் புலனாய்வுக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.