அங்குசம் சேனலில் இணைய

மோடி குறித்து பிரதமர் அலுவலகத்துக்கு அவதூறு இ-மெயில்: பிஎச்.டி மாணவரிடம் 36 மணிநேரமாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறு தகவல்களை இ-மெயில் மூலம் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பிய தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பிஎச்.டி மாணவரிடம் சிபிஐ அதிகாரிகள் கடந்த 36 மணி நேரமாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் சாலியமங்கலம் அருகேயுள்ள பூண்டி தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் விக்டர் ஜேம்ஸ் ராஜா (35).

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

எம்.காம் பட்டதாரியான ராஜா தற்போது தஞ்சை அருகேயுள்ள ஒரு கல்லூரியில் சுற்றுச்சூழல் குறித்து பிஎச்.டி படித்து வருகிறார்.
சாதாரண விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது பெற்றோருக்கு இவர் ஒரே பிள்ளை. இவரது தந்தை ஜெயபால், விவசாயி.  தாய் மணி.

பிறப்பால் இந்துவான விக்டர் ஜேம்ஸ் ராஜா சில ஆண்டுகளுக்கு முன் கிறஸ்தவ மதத்தைத் தழுவியுள்ளார். இவரது குடும்பத்தில் இவர் ஒருவர் மட்டுமே கிறிஸ்தவ மதத்தை தழுவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

பிஎச்.டி படித்துவரும் விக்டர் ஜேம்ஸ் ராஜா இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், இவரது இ-மெயலில் இருந்து பிரதமர் அலுவலக இ-மெயிலுக்கு பிரதமர் மோடி குறித்து அவதூறு தகவல்கள் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

இதையடுத்து, சிபிஐ அதிகாரி சஞ்சய் கௌதம் என்பவர் தலைமையில் 11 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை 6 மணியளவில் பூண்டி தோப்பு பகுதிக்குச் சென்று அங்கு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த விக்டர் ஜேம்ஸ் ராஜாவை எழுப்பி அவரிடம் விசாரணை நடத்தினர்.

சுமார் ஒன்னரை மணிநேர விசாரணைக்கு பின்னர் அவரை காரில் தஞ்சைக்கு அழைத்து வந்து புதுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள மத்திய அரசுக்கு சொந்தமான கல்வி நிறுவன வளாகத்தில் உள்ள ஒரு அறையில் வைத்து அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.


இரண்டாவது நாளான இன்றும் இவ்விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதையடுத்து கல்வி நிலைய வளாகம் அருகே யாரும் அனுமதிக்கப்படவில்லை.

இதற்கிடையே, தங்களது மகன் எந்த தவறும் செய்யவில்லை என விக்டர் ஜேம்ஸ் ராஜாவின் பெற்றோர் கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.

“வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த எங்களது மகனை விசாரணை என்ற பெயரில் சிபிஐ அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். ஆனால் அவனை எங்கே அழைத்துச் செல்கிறோம் என்ற தகலை சிபிஐ அதிகாரிகள் தெரிவிக்கவில்லை,” என்கிறார் ஜெயபால்.


“எனது மகன்கிட்ட கேட்டப்ப ‘ நான் எந்தவொரு தவறும் செய்யவில்லை…பயப்பட வேண்டாம்’ என்றான். எங்களது மகன் குறித்து இதுவரை எந்த தகவலும் தெரியவில்லை. விசாரணை நடத்தும் இடத்திலும் எங்கள் மகனை பார்க்க எங்களை அனுமதிக்கவில்லை. எங்கள் மகன் எந்த தவறும் செய்து இருக்க மாட்டான். அவனை விட்டுவிடுங்கள்,” என்கிறார்   விக்டர் ஜேம்ஸ் ராஜாவின் தாய் மணி, கண்ணீர் மல்க.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.