அரசுப் பள்ளி 7.5% இடஒதுக்கீடு கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்களுக்கும் வேண்டும்: மதுரை பேராயர் கோரிக்கை!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

மதுரை ரயில்வே காலனி பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் நிறுவப்பட்ட பழமையான இருதய ஆண்டவர் கத்தோலிக்க தேவாலயம் நூறாவது ஆண்டை எட்டியுள்ள நிலையில் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மதுரை ரயில் நிலையத்தைச்சுற்றிய பகுதிகளில் ஆங்கிலேயர்கள் தங்களது பிரார்த்தனை மற்றும் வழிபாட்டிற்காக பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களை நிறுவியிருந்தனர். அந்த வகையில் மதுரை ரயில்வே காலனி பகுதியில் அமைந்துள்ள இருதய ஆண்டவர் தேவாலயம் நூறு ஆண்டுகளை கடந்து தனது நூற்றாண்டு விழாவை தொடங்கியுள்ளது.

இந்த வார அங்குசம் வார இதழில்…

இதையொட்டி தேவாலய பங்குத்தந்தை ஜான் திரவியம் தலைமையில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது. இதில் மதுரை உயர் மறை மாவட்ட பேராயர் மேதகு டாக்டர் அந்தோணிசாமி சவுரிமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கிறிஸ்தவர்களுக்கு நற்செய்தி வழங்கினார். பேராயர் தேவாலயத்திற்கு வருகை தந்தபோது சாலையின் இருபுறமும் காத்திருந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வண்ணஆடைகள் அணிந்த குழந்தைகள் மலர்கள் தூவி அவரை வரவேற்றனர்.

தேவாலய வளாகத்தில் தமிழகத்தின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் பாடல்கள் பாடப்பட்டதுடன், விவிலியத்தின் முக்கிய வசனங்கள் எடுத்துரைக்கப்பட்டு சிறப்பு பிரார்த்தனைகளும் நடைபெற்றன. நூற்றாண்டு விழாவின்தொடக்கத்தை குறிக்கும் வகையில் தேவாலய வளாகத்தில் கொடியேற்ற நிகழ்ச்சியும் நடைபெற்றது. அப்போது அங்கு திரண்டிருந்த கிறிஸ்தவர்கள் கைதட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நூறு ஆண்டுகளுக்கு முன்பு பயன்பாட்டில் இருந்து,கடந்த சுமார் 50ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்த தேவநற்கருணை ஆராதனை இடம் தேவாலயத்தின் அடிப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது. சுரங்கம் போன்ற அமைப்பில் செல்லக்கூடிய இந்த பகுதியில் இயேசுகிறிஸ்துவின் திருப்பிரசன்னத்தை நினைத்து அமைதியாக ஜெபித்து ஆராதனை செய்வது வழக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

தற்போது அந்த பழமையான பகுதியை புனரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தேவாலயத்தில் பல்வேறு ஆன்மிக மற்றும் சமூக நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் டாக்டர் அந்தோணிசாமி சவுரிமுத்து கிறிஸ்தவர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு அரசின் திட்டங்கள் முழுமையாக கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

கிறிஸ்தவர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி ஏழை, எளிய மக்கள் மற்றும் பிற மதங்களைச்சேர்ந்த மாணவர்களும் கல்வி பயின்று வருவதாக தெரிவித்த அவர், அரசு பள்ளிகளுக்கு வழங்கப்படும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை தங்களைப் போன்றவர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கும் வழங்க வேண்டும் என்றார். தங்களது நிறுவனங்கள் மூலம் மக்களுக்கு உதவி செய்ய ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை என்றும், தனிப்பட்ட முறையில் தங்களுக்கு எந்த கோரிக்கையும் இல்லை என்றும் தெரிவித்தார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் சில நெருக்கடிகள் இருந்ததாகவும், அரசு எந்தவிதமான பாரபட்சமும் காட்டாமல் அனைத்து தரப்பு மக்களையும் சமமாக அணுக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தற்போது ஆட்சிக்கு வந்துள்ள தமிழக வெற்றிக்கழக அரசுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளதாகவும், இதுவரை நேரில் சென்று கோரிக்கைகளை முன் வைக்கவில்லை என்றும் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழக அரசு புதிதாக பொறுப்பேற்றுள்ள நிலையில், ஆட்சியில் இருப்பவர்கள் தங்களது பணிகளை கற்றுக்கொண்டு செயல்பட்டு வருவதாக தான் கருதுவதாகவும் பேராயர் தெரிவித்தார்.

மேலும், கடந்த 1996-ஆம் ஆண்டுக்குப் பின்னர்ஆரம்பப் பள்ளிகளில் இருந்துஉயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படாத நிலை இருப்பதாகவும், அந்த நிலை மாற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். மதுரை மாவட்டம் வரலாற்று சிறப்புமிக்க கிறிஸ்தவ பணித்தளமாக இருந்து வருவதாகவும், 16-ஆம் நூற்றாண்டிலேயே கிறிஸ்தவ பணியாளர்கள் மதுரைக்கு வந்து பணியாற்றியுள்ளதாகவும் அவர்தெரிவித்தார்மதுரையை மையமாகக்கொண்டு கொடைக்கானல், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றாண்டுகளைகடந்ததேவாலயங்கள் இருப்பதாகவும் பேராயர் குறிப்பிட்டார். தமிழக வெற்றிக்கழக தலைவர் ஜோசப் விஜய் றுபான்மையின மக்களுக்கு ஏதாவது செய்வாரா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த பேராயர், ஜோசப் விஜய் சிறுபான்மையின மக்களுக்கு மட்டும் அல்லாமல் அனைத்து மக்களுக்கும் செய்ய வேண்டும் என்றும் அனைத்து மக்களுக்கான உரிமைகளையும் அவர் பெற்றுத்தர வேண்டும் என்றும்.தெரிவித்து. நூறு ஆண்டுகளை எட்டியுள்ள இருதய ஆண்டவர் தேவாலயம் ஆன்மிக முக்கியத்துவம் மட்டுமின்றி திரைப்படத்துறையுடனும் தொடர்புடையதாக உள்ளது. தனுஷ் நடிப்பில் வெளியான ‘ஆடுகளம்’ திரைப்படத்தின் காட்சிகள் இந்த தேவாலயத்தில் படமாக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் இதனை அறிந்த மதுரை மக்கள் பழமையான தேவாலயத்தை ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர் என்றார்.

—   ஷாகுல், படங்கள் : ஆனந்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.