பட்டியலின மக்களுக்கான உள் இடஒதுக்கீடு எதிர்கொள்ளும் சவால்களும், சிக்கல்களும் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பண்டிதர் பதிப்பகம், வணங்காமுடி பதிப்பகம், அயோத்திதாசர் அம்பேத்கர் வாசகர் வட்டம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் ‘பட்டியலின மக்களுக்கான உள் இடஒதுக்கீடு எதிர்கொள்ளும் சவால்களும், சிக்கல்களும்’ என்ற தலைப்பில் சமூகநீதி கருத்தரங்கம் மதுரையில், மாட்டுத்தாவணி  ராமசுப்பு அரங்கில் நடைபெற்றது.

அ . தமிழ்முரசு தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், வே. தமிழ்கனி வரவேற்புரை நிகழ்த்த, முத்து பிரதீபன் சாக்யா , நலங்கிள்ளி , மேக பிரவீன் ஆகியோர் முன்னிலை வகிக்க, ‘பட்டியலின மக்களுக்கான உள் இடஒதுக்கீடு எதிர்கொள்ளும் சவால்களும், சிக்கல்களும்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் அருள் முத்துக்குமரன் சிறப்புரையாற்றினார்.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

மேலும், மக்கள் தேசம் கட்சி தலைவர் ஆசைத்தம்பி, இந்திய குடியரசு கட்சியின் பொது செயலாளர்  மங்காபிள்ளை,  மூவேந்தர் புலிபடை தலைவர் செ.பாஸ்கர், தமிழ் தேசிய கழகம் தலைவர் மு.கா. வையவன், உசச நீதி மன்ற வழக்கறிஞர் கணேசமூர்த்தி ,  தலித் சிந்தனையாளர் வட்டம் சி.லட்சு மணன், தமிழ்நாடு பறையர் பேரவை கி.கதிரவன்,  பேராசிரியர் நாகூர்கனி, அறிவு சமுகம் தலைவர் தமிழ் முதல்வன் உட்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்று உரை நிகழ்த்தினர்.

 

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

கருத்தரங்கில்,

1) சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் பட்டியல் இனத்துக்கு இடஒதுக்கீட்டு அளவை உயர்த்த வேண்டும்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

2) உள் ஒதுக்கீடு சார்ந்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை ரத்து செய்யும் வகையில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும்.

3) தமிழகத்தில் உள் ஒதுக்கீடு அமலுக்கு வந்த 2009 முதல்  இதுநாள் 2024 வரை இட ஒதிகீட்டின்படி  அரசு துறை சார்ந்த SC மற்றும் SCA பணியமர்த்தபட்ட  பணியார்களின் விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.

4) தமிழக அரசு கடந்த 15 ஆண்டுகளாக உள் ஒதுக்கீடு மூலம் SCA அல்லாதவர்களுக்கு ஏற்பட்ட அநீதியை   கணக்கில் கொண்டு உள் ஒதுகீட்டை ரத்து செய்வதுடன் 200 ROSTER முறையையும் ரத்து செய்ய வேண்டும்.

5) அரசு துறையில் உள்ள ஒப்பந்த ஊழியர்களை பணியமர்த்தும் போது கர்நாடக அரசு கடைபிடிக்கும் இட ஒதுக்கீட்டு நடைமுறைப்போல் தமிழகத்திலும் நடைமுறைபடுத்த வேண்டும்.

6) தனியார் துறையில் இட ஒதுக்கீடு முறையை நடைமுறைபடுத்த  மத்திய அரசு சட்டம்  இயற்ற வேண்டும். என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக முத்து பிரதீபன் சாக்யா நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவுற்றது.

 

— அருள் முத்துக்குமரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.