ரசிகர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய துருவ் விக்ரம்
செப்டம்பர் 24 இளம் ஹீரோ துருவ் விக்ரமின் பிறந்த நாள். இதையொட்டி அவரது ரசிகர்கள் சென்னையில் உள்ள கிருஷ்ணவேணி திரையரங்கில் திரண்டனர். துருவ் விக்ரமுடன் இணைந்து, கேக் வெட்டி கொண்டாடி செல்ஃபியும் எடுத்து மகிழ்ந்தனர். இந்த கொண்டாட்டத்தின் அடுத்த கட்டமாக சீயான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் முதன்முதலாக இணைந்து நடித்த ‘மகான்’ திரைப்படம் தனிப்பட்ட காட்சியாக ( Private Show) திரையிடப்பட்டது. இதனை ரசிகர்களுடன் இணைந்து துருவ் விக்ரம் உற்சாகமாக பார்வையிட்டார்.
இந்நிகழ்வை அகில இந்திய சீயான் விக்ரம் நற்பணி மன்ற தலைவரும், மேலாளருமான சூரிய நாராயணன் ஒருங்கிணைத்திருந்தார்.
துருவ் விக்ரம் இப்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பைசன்- காளமாடன்’ படத்தில் நடித்து வருகிறார்.
— மதுரை மாறன்