கட்டிட தொழிலாளி படுகொலை ! ரேஷன் அரிசி கஞ்சா கடத்தல் நபா்கள் கைது

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள செண்பகப்பேரி கீழத் தெருவை சேர்ந்த செண்பகராஜ்  மகன் பாண்டியராஜன் (25), அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் படுகொலை செய்யப்பட்டார்.

பாண்டியராஜன் சடலத்தை கைப்பற்றி கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், திருநெல்வேலி சரக டிஐஜி மூர்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், டிஎஸ்பி வெங்கடேஷ், நாலாட்டின்புதூர் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) பிரேமா உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

துணை முதலமைச்சர் உதயநிதி வாழ்த்து

போலீசாரின், முதற்கட்ட விசாரணையில் செண்பக பேரியைச் சேர்ந்த சதீஷ் என்பவருக்கும், பாண்டிய ராஜனுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதில், ஏற்பட்ட தகராறில் சதீஷ் தனது நண்பரான மதன் என்பவருடன் சேர்ந்து பாண்டியராஜனை கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸார் தேடி வந்தனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

இதற்கிடையில் ”பாண்டியராஜன்,கொலைக்கு காரணமான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்,கொலை செய்யப்பட்ட பாண்டியராஜன், குடும்பத்திற்கு  ரூ.50 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும், பாண்டியராஜ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்” என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாண்டியராஜன் உடலை வாங்க மறுத்து   அவரது உறவினர்கள், பாண்டியராஜன் ஊரான செண்பகபேரி கிராமத்தில்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொலை செய்யப்பட்டவரும், குற்றம் சாட்டப்பட்ட வர்களும் வெவ்வேறு சமூகங்களை சேர்ந்தவர்கள் என்பதால் பிரச்சனை எதுவும் ஏற்படாமல் இருக்க கோவில்பட்டி அரசு மருத்துவமனை மற்றும் செண்பகப்பேரி கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

கொலை செய்யப்பட்ட பாண்டியராஜன் உறவினர் ரஞ்சித் என்பவர், சதீஷ் என்பவரின்  சகோதரியை கடந்த 2019 ஆம் ஆண்டு கிண்டல் செய்ததாக பிரச்சனை எழுந்துள்ளது. இதனால் சதீஷ் மற்றும் ரஞ்சித் இடையே பிரச்சனை ஏற்பட்டு, சதீஷ் அவரது வீட்டில் சென்று அவரது தந்தையை தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இந்த வழக்கினை தொடர்ந்து சதீஷ் மும்பையில் இட்லி கடை வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார். மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஊருக்கு வந்து செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது.

அதேபோன்று கடந்த வாரம் சதீஷ் ஊருக்கு வந்துள்ளார். அவருடைய நண்பர் மதனுடன் சுற்றித்திரிந்துள்ளார். முன் பகையை  வைத்து தான் ரஞ்சித் பழிவாங்க வேண்டும் என்பதற்காக அவரது உறவினரான பாண்டியராஜனை , சதீஷ் மற்றும் மதன்  இருவரும் சேர்ந்து கொலை செய்திருக்கலாம் என்று  போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

இவை தவிர வேறு எதுவும் பிரச்சனைகள் இருக்கிறதா , அல்லது வேறு எதுவும் காரணமா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன்  கொலை செய்யப்பட்ட பாண்டியராஜன் உறவினர்களுடன் நேற்று மாலை முதல் இரவு வரை கோவில்பட்டி தாசில்தார் சரவண பெருமாள், ஆதிதிராவிட நலத்துறை தனித் தாசில்தார் ராஜ்குமார், கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.  இந்நிலையில் இன்று காலையில் பாண்டிராஜன் உடலை வாங்கிக் கொள்ள அவரது உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் கிளவிபட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவரும், பாஜக நிர்வாகிமான வழக்கறிஞர் பரத் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் கஞ்சா விற்பனை தொடர்பாக படுகொலை செய்யப்பட்ட பாண்டியராஜன் காவல்துறைக்கு தகவல் கொடுத்த காரணத்தினால் தான் அவர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக” குற்றம் சாட்டியுள்ளார்.

நீண்ட போராட்டத்திற்கு பின்னர் உடலை வாங்கிக் கொள்ள அவரது உறவினர்கள் சம்மதம் தெரிவித்து  உடலைப் பெற்றுக் கொண்டு தகவல் செய்துள்ளனர். இதனால் கோவில்பட்டி பகுதியில் சற்று பதற்றம் தணிந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக செண்பகப்பேரி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ். மற்றும் அவரது நண்பர் மதன். இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் தான் பாண்டியராஜனை எதற்காக கொலை செய்தனர் என்ற உண்மை வெளியே வரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

—-மணிபாரதி

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.