கள்ளக்காதல் தகராறில் பெண் கழுத்தறுத்து கொலை…. ! சாத்தூர் – திகில்

0
dear movie banner

கள்ளக்காதல் தகராறில் பெண் கழுத்தறுத்து கொலை…. ! சாத்தூர் – திகில்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள ஊத்துப்பட்டி சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் கட்டிடம் கட்டும் கொத்தனர் வேலை பார்த்து கொண்டு தனது மனைவி ராஜேஷ்வரியுடன் வசித்து வருகிறார். இருவருக்கும் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் ராஜேஸ்வரி இன்று காலை கழுத்து அறுபட்ட நிலையில் அவர் குடியிருந்த வீட்டு பகுதியின் முன்பு உயிரிழந்து கிடந்துள்ளார்.

Happy homes

இது குறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஏழாயிரம்பண்ணை போலீசார் கழுத்து அறுபட்டு உயிரிழந்த நிலையில் கிடந்த ராஜேஸ்வரியின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர் விசாரணையில் ராஜேஸ்வரிக்கும் சங்கரநத்தம் கிராமத்தை சேர்ந்த மரம் வெட்டும் கூலித்தொழிலாளியான பரமசிவம் என்பவருக்கும் நீண்ட நாள் தவறான பழக்கம் இருந்து வந்தது தெரிய வந்தது.

- Advertisement -

- Advertisement -

இருவருக்கும் சமீபத்தில் தகராறு ஏற்பட்டதாகவும் தெரிய வருகிறது. இதனை அடுத்து மேற்கொண்டு நடத்திய விசாரணையில் பரமசிவம் ராஜேஸ்வரியை கழுத்து அறுத்து கொலை செய்துவிட்டு தலைமறைவாகியது தெரிய வந்தது இச்சம்பவம் குறித்து ராஜேஸ்வரியின் கணவர் முத்துப்பாண்டி மற்றும் கொலையாளி பரமசிவம் மற்றும் அம்மா ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலை சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சென்று நேரில் ஆய்வு செய்தார். மேலும் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடத்தி வருகின்றனர். கள்ளக்காதல் தகராறில் பெண்ணை கொலை செய்துவிட்டு தலைமறைவான பரமசிவத்தை ஏழாயிரம்பண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

– மாரீஸ்வரன் 

3 kavi national
Leave A Reply

Your email address will not be published.