சென்னை பிரஸ் கிளப் (425/2021) புதிய நிர்வாகிகள் தேர்வு !

2024-2025 ஆம் ஆண்டிற்கான நிர்வாகிகளின் தேர்வு நடைபெற்றது. அரங்கம் நிறைந்த பத்திரிகையாளர்களின் பலத்த கரவொலிகளுக்கிடையே புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்கள்.

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சென்னை பிரஸ் கிளப் (425/2021) புதிய நிர்வாகிகள் தேர்வு !

சென்னை பிரஸ் கிளப் (425/2021) சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் 2024 – ஆம் ஆண்டிற்கான பொதுக்குழு மற்றும் 2024-2025 ஆம் ஆண்டிற்கான புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு ஆகிய முப்பெரும் விழா மார்ச் 31 அன்று மாலை சென்னை கிண்டி தொழிற் பேட்டைவளாகத்தில் அமைந்துள்ள ஹோட்டல் மலையப்பா அரங்கத்தில் இனிதே நடைபெற்றது.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

சென்னை பிரஸ் கிளப் கௌரவ ஆலோசகர்களில் ஒருவரான புஹாரி செரீஃப் தலைமையில் தொடங்கிய இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் எஸ்.எம்.ஹிதாயத்துல்லா ; இந்திய தவ்ஹீத் ஜமாஅத்-இன் துணைத் தலைவர் முனீர் ஆகியோர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர். இந்நிகழ்வு மார்ச்-31 அன்று ஈஸ்டர் பெருநாள் என்பதாலும், சமுதாய நல்லிணக்கத்தை பேணும் வகையிலும் பாஸ்டர் லியோ லாரன்ஸ் அவர்களும் சிறப்பு அழைப்பாளராக இந்நிகழ்வில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இஃப்தார் நிகழ்வையடுத்து, தொடங்கிய 2024 -ஆம் ஆண்டிற்கான பொதுக்குழு மற்றும் 2024-2025 ஆம் ஆண்டிற்கான புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு தலைவர் அ.செல்வராஜ் அவர்கள், தலைமையில் தொடங்கியது. இந்நிகழ்வில் மூத்த பத்திரிகையாளர் முன்னாள் தொழிற்சங்க தலைவர் இ.கோபால்; முதுபெரும் மூத்தப் பத்திரிகையாளர்கள் சங்கொலி மு. நெடுமாறன் மற்றும் ஜனசக்தி இசைக்கும்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முப்பெரும் விழா நிகழ்வை பத்திரிகையாளர் ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.

தங்க மயில் - Akshaya Tritiya Specials at Thangamayil | Golden Offers | Thangamayil Jewellery Limited

இதனைத்தொடர்ந்து 2024-2025 ஆம் ஆண்டிற்கான நிர்வாகிகளின் தேர்வு நடைபெற்றது. அரங்கம் நிறைந்த பத்திரிகையாளர்களின் பலத்த கரவொலிகளுக்கிடையே புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்கள்.

சென்னை பிரஸ் கிளப் (425/2021)-ன், 2024 -25 ஆம் ஆண்டிற்கான நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விவரம்:

தலைவர் : அ.செல்வராஜ்

பொதுச்செயலாளர் : ச.விமலேஷ்வரன்

துணைத் தலைவர்கள் : சு.காதர் உசேன், ஆர்.டி.ராஜன்பாபு.

பொருளாளர் : த.மோனிஷ்வரன்

கௌரவ ஆலோசகர்கள் : எஸ்.புஹாரி செரீஃப், பி.சிவசுப்ரமணியன்.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

செயற்குழு உறுப்பினர்கள் : நா.கோவிந்தராஜன், ஆர்.குமார், பாரதிவேந்தன், வே.தினகரன்.

நிர்வாக சீரமைப்புக்குழு : ஏ.கே.முகைதீன் கஃபார், ஆர்.ரவி.

ஒருங்கிணைப்புக் குழு : கு.கௌரிசங்கர், ஏ.கே.சுந்தர், டி.பிரசாத், ரா.சுரேஷ்.

ஆலோசனைக்குழு : பி.அமானுல்லா, எம்.செந்தமிழினியன்.

அலுவலக மேலாளர் : அ.சீனிவாச ராவ்.

புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் அறிமுகத்தையடுத்து, 2024-25 ஆம் ஆண்டிற்கான புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு தொடங்கியது. இவ்விழாவில் முன்னிலை வகித்த 70 வயதை கடந்த முதுபெரும் மூத்த பத்திரிகையாளர்கள் சங்கொலி மு.நெடுமாறன் மற்றும் ஜனசக்தி இசைக்கும்மணி ஆகியோர்களுக்கு பத்திரிகையாளராக அவர்களது கடந்தகால பங்களிப்பை சிறப்புறச்செய்யும் வகையில், இதுவரை எந்த ஒரு பத்திரிகையாளர் சங்கமும் செய்திராத வகையில், அவர்களுக்கு ”வாழ்நாள் உறுப்பினர் – LIFE TIME MEMBER” என்ற அங்கீகாரத்துடனான அடையாள அட்டையும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

நமது சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள முதுபெரும் மூத்த பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் இந்த நடைமுறை இனியும் தொடரும் என்பதாக இப்பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

இறுதிநிகழ்வாக, பொதுக்குழுவில் பங்கேற்ற சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் தலைவர் அ.செல்வராஜ், மூத்த பத்திரிகையாளர் முன்னாள் தொழிற் சங்கத் தலைவர் இ.கோபால்; முதுபெரும் மூத்த பத்திரிகையாளர்கள் சங்கொலி நெடுமாறன் மற்றும் ஜனசக்தி இசைக்கும்மணி ஆகியோர் புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர் அட்டையை வழங்கினர்.

நிறைவாக, நிர்வாக சீரமைப்புக் குழுவின் தலைவர் மொய்தீன் கஃபார் அவர்கள், சங்கம் கடந்து வந்த பாதையை சுட்டிக்காட்டி உறுப்பினர்கள் அனைவரின் உத்வேகமான செயல்பாடுகளால் தனித்துவமான சங்கமாக கட்டியமைக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியவர், சங்க செயல்பாடுகள் குறித்தான கறாரான வழிமுறைகளை அடுத்து நடைபெறும் செயற்குழுவில் முடிவு செய்ய வேண்டுமென்பதை முன்மொழிந்தார். தேர்தல் கால கடுமையான பணிச்சூழல்களுக்கு மத்தியிலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பங்கேற்ற இருநூறுக்கும் அதிகமான பத்திரிகையாளர்களால் அரங்கம் நிறைந்த நிகழ்வாக மட்டுமின்றி, அனைவரின் மனம்நிறைந்த நிகழ்வாகவும் அமைந்தது.

தகவல்:
சென்னை பிரஸ் கிளப், (CHENNAI PRESS CLUB) பதிவு எண்: 425/2021.
பதிவு அலுவலகம் : எண்:25/12, ஏரிக்கரை சாலை, கோட்டூர்,
சென்னை – 600085. 
தொடர்புக்கு : 9176561003.
மின்னஞ்சல் : Chennaipressclub2021@gmail.com இணையதளம் : Chennaipressclub.in

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.