மேனேஜர் பிடியில் சினிமா வி.ஐ.பி.க்கள்!

-மதுரை மாறன்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மேனேஜர் பிடியில் சினிமா வி.ஐ.பி.க்கள்!

தமிழ் சினிமாவின் ஹீரோக்கள், ஹீரோயின்கள், கேரக்டர் ஆர்ட்டிஸ்டுகள், கேமராமேன் போன்ற டெக்னீஷியன்கள் எல்லோருமே தங்களுக்கென பி.ஆர்.ஓ.க்களை வைத்திருப்பார்கள். மேற்படி இவர்களைப் பற்றிய பாஸிட்டிவான செய்திகள் பிரிண்ட் மீடியாக்களிலும் சோஷியல் மீடியாக்களிலும் ரிலீஸாவதற்கு இந்த பி.ஆர்.ஓ.க்கள் தான் கடினமாக உழைப்பார்கள். ஆனால் தங்களது வாழ்க்கை பாஸிட்டிவாக இருப்பதற்கும் வசதி வாய்ப்புகள் புரொமோட் ஆவதற்கும் ஹீரோக்களும் ஹீரோயின்களும் பெரிதும் நம்பியிருப்பது தங்களது மேனேஜர்களைத் தான். ’மேனேஜர் சொல்லுக்கு மறு சொல் இல்லை’ என்ற ரேஞ்சில் தான் இப்போது தமிழ் சினிமாவில் பல ஹீரோக்களும் ஹீரோயின்களும் இருக்கிறார்கள்.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

அப்படிப்பட்ட மேனேஜர்கள் லிஸ்டில் இப்போது டாப் லெவலில் இருப்பது ஜெகதீஸ் என்பவர் தான். கோயம்புத்தூரைச் சேர்ந்த இந்த ஜெகதீஸ் சாஃப்ட்வேர் டெக்னாலஜியில் கைதேர்ந்தவர். வயதும் இவருக்கு 40-க்குள் தான். விஜய் நற்பணி இயக்கத் தலைவராக இருக்கும் புஸ்ஸி ஆனந்தைப் பிடித்து, அவர் மூலம் ‘தலைவா’ படம் ரிலீஸ் சமயம் விஜய்யிடம் அறிமுகமனார். ஜெகதீஸின் அப்டேட்  ஸ்பீடைப் பார்த்து ஆச்சர்யப் பட்ட விஜய், தனக்கு மேனேஜராகவும் நியமித்தார்.

புஸ்ஸி ஆனந்தும் ஜெகதீஸும் இணைந்து, விஜய் எப்போதுமே குஷி மூடில் இருக்கும்படி பார்த்துக் கொண்டார்கள். ஒருகட்டத்தில் தனது தாய்-தந்தையிடமிருந்தே விஜய் விலகியிருக்கும்படி(இப்போது வரை அதுதான் நிலைமை) செய்துவிட்டார்கள் என்றால், மேற்படி பார்ட்டிகளின் ‘பலே’ வேலைகள் எப்படியிருந்திருக்கும், எப்படியிருக்கும் என்று நீங்களே யோசிச்சுக்கங்க.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ஜெகதீஸின் சிறப்பான மற்றும் ஸ்பீடான வேலைகளைத் தெரிந்து கொண்ட விஜய்யின் ஹீரோயின்களான கீர்த்தி சுரேஷ், சமந்தா, பூஜாஹெக்டே மாளவிகா மோகனன் ஆகியோரும் ஜெகதீஸையே தங்களது மேனேஜர்களாக அப்பாயிண்ட்மெண்ட் பண்ணினார்கள். இதில் பூஜாஹெக்டேவுக்கும் மாளவிகா மோகனனுக்கும் தெலுங்கு சினிமா சான்ஸ்களைக் ‘கேட்ச்’ பண்ண தனி மேனேஜர்கள் இருக்கிறார்கள். ஆனால் சமந்தாவுக்கும் கீர்த்தி சுரேஷுக்கும்  தமிழுக்கு மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்றவற்றிற்கும் ஜெகதீஸ் தான் மேனேஜர்.

ஜெகதீஸின் ‘கைடு லைன்’ கரெக்டாக இருப்பதாலும் கரன்சி மழை கொட்டுவதாலும் இவர் என்ன சொன்னாலும் யாரைக் கைகாட்டி னாலும் ”எஸ் பாஸ்”, “ஓகே.பாஸ்” எனச் சொல்லும் அளவுக்கு இருக்கிறார்கள் கீர்த்தி சுரேஷும் சமந்தாவும். சமீபத்தில் கூட உள்ளாடைக் கம்பெனி ஒன்றின் விளம்பரத்தில் படுகிளாமராக சமந்தா நடித்தது ஜெகதீஸ் கொடுத்த ஐடியாப்படி தானாம். இதன் மூலம் சமந்தாவுக்கு கிடைத்த சில கோடி சம்பளத்தில் பல லட்சங்களை கமிஷனாக கல்லா கட்டினாராம் ஜெகதீஸ்.  சமீபத்தில் பீச் ரிசார்ட் ஒன்றில் பெரிய தொகையை முதலீடு செய்துள்ளாராம் கீர்த்தி சுரேஷ்.

இப்படி நாலா திசைகளிலிருந்தும் வந்து குவியும் கமிஷன்களால், கடந்த ஐந்தாறு வருடங்களில் பல கோடிகளுக்கு அதிபதியாகிவிட்டாராம் ஜெகதீஸ். இவரின் அபார வளர்ச்சியையும் லைஃப்ஸ்டைலையும் பார்த்து சீனியர் மேனேஜர்கள் பலர் அதிர்ச்சியில் உள்ளார்களாம். பி.ஆர்.ஓ. ஒருவரும் ஜெகதீஸுடன் பார்ட்டனராகி பல லட்சங்களை கல்லா கட்டி வருகிறாராம். சொந்தமாக பெரிய  வீடிருந்தும் வாடகை வீட்டில் வசிப்பது போல் சீன் போட்டு வருகிறாரார் அந்த பி.ஆர்.ஓ. சினிமாவுல இதெல்லாம் சகஜமப்பா. எங்கிட்டோ நல்லா இருந்தா சரி தான். மாட்டிக்காம இருந்தா ஓ.கே.தான்

-மதுரை மாறன்

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.