பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தமிழ் ஆசிரியர் கைது !

நௌசாத்

0

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த              தமிழ் ஆசிரியர் கைது

 

குளித்தலையில் வேலியே பயிரை மேய்ந்த பழமொழி போல் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தமிழ் ஆசிரியர் போஸ்கோ சட்டத்தில் கைது. கரூர் மாவட்டத்தில் தொடருது பாலியல் சீண்டல்கள்.

கரூர் மாவட்டம் , குளித்தலை அருகே உள்ள கிருஷ்ணராயபுரம் பகுதி, கருப்பூர், பூஞ்சோலை புதூரைச் சேர்ந்தவருக்கு மூன்று மகள்கள். இவரது மூத்த மகள் பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 10- வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் மாணவி அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாகவும்,
இதைப் பார்த்த மாணவியின் தாய், யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறாய்? என விசாரித்தபோது ,

மாணவி அந்தப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக இருந்த திருச்சி மாவட்டம் , முசிறி பார்வதிபுரத்தைச் சேர்ந்த அப்பாவும் மகன் நிலவொளி வயது 42. என்பவர் தன்னை காதலிப்பதாகவும், அவர் திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். எனவே நிர்வாணமாக படம் எடுத்து அனுப்புமாறு கூறியதாக மாணவி தனது தாயிடம் கூறியுள்ளார்.

இதை பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் நேரில் சென்று கேட்டபோது,

அவரை மிரட்டியதோடு, கொலை மிரட்டல் வடுத்ததாக லாலாபேட்டை காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜோதி வழக்கு பதிவு செய்து, தமிழ் ஆசிரியர் நில ஒளியை தேடி வருகிறார்.
இந்த சம்பவம் வேலியே பயிரை மேய்ந்த பழமொழியை மிஞ்சியதாக உள்ளது.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.