காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலை “ஸ்வச்சதா ஹி சேவா 2026-” தூய்மைப்பணி விழிப்புணர்வு பேரணி

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காந்திகிராமம் மற்றும் திண்டுக்கல் ரயில் சந்திப்பு ஆகியவை இணைந்து, “ஸ்வச்சதா ஹி சேவா 2026” இயக்கத்தின் ஒரு பகுதியாக திண்டுக்கல் ரயில் சந்திப்பு வளாகத்தில் தூய்மைப் பணியை சிறப்பாக நடத்தின.

இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே தூய்மை, நெகிழிப் பொருட்களின் பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்புகள், கழிவு மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். இந்நிகழ்வில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு எம்.எஸ்சி. (புவிசார் தகவலியல்) மற்றும் புவிசார் தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டயப் படிப்பு பயிலும் சுமார் 70 மாணவர்கள் NSS தன்னார்வலர்களாக ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் N. பஞ்சநதம் கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார். தனது உரையில், நெகிழிப் பைகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள், ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருட்களைத் தவிர்க்க வேண்டியதன் அவசியம் மற்றும் அதற்குப் பதிலாக மஞ்சள் துணிப்பைகளை  பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தூய்மைப்பணி விழிப்புணர்வு பேரணிமேலும், பொது இடங்களின் தூய்மையைப் பேணுவதில் ஒவ்வொருவருக்கும் உள்ள பொறுப்பு குறித்தும் அவர் எடுத்துரைத்தார். இந்நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்வதற்கு தேவையான ஒத்துழைப்பையும் ஏற்பாடுகளையும் செய்த திண்டுக்கல் ரயில்வே ஊழியர்களுக்கு துணைவேந்தர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

தூய்மைப் பணி

NSS தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள் திண்டுக்கல் ரயில் சந்திப்பு வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். இப்பணியின் போது நெகிழிக் கவர்கள், பயன்படுத்தப்பட்ட குடிநீர் பாட்டில்கள், பாட்டில் மூடிகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு, ரயில் நிலைய வளாகம் சுத்தம் செய்யப்பட்டது.

மாணவர்களின் பங்கேற்பு மூலம் “தூய்மை என்பது அரசு அல்லது ஒரு நிறுவனத்தின் பொறுப்பு மட்டுமல்ல; ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பாகும்” என்ற செய்தி வலியுறுத்தப்பட்டது.

விழிப்புணர்வு பேரணி

திண்டுக்கல் ரயில் சந்திப்பு வளாகத்தில் மாணவர்கள் மற்றும் NSS தன்னார்வலர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது. மாணவர்கள் பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

பேரணியில் இடம்பெற்ற முக்கிய விழிப்புணர்வு செய்திகள்:

நெகிழிப் பொருட்களைப் பயன்படுத்தாதீர்

துணிப்பைகளைப் பயன்படுத்துவோம்

அதிக மரங்களை நடுவோம்

மழைநீரைப் பாதுகாப்போம்

மழைநீர் சேகரிப்பை ஊக்குவிப்போம்

குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடுவோம்

இந்தப் பேரணி மூலம் ரயில் பயணிகள், பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே நெகிழிப் பயன்பாட்டைக் குறைத்தல், இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் சுற்றுப்புறத் தூய்மையைப் பேணுதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் துணிப்பைகள் வழங்கல்

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

தூய்மைப் பணியில் ஈடுபட்ட NSS தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்களுக்கு கையுறைகள் மற்றும் முகக்கவசங்கள் வழங்கப்பட்டன. மேலும், ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழிப் பைகளுக்குப் பதிலாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணிப்பைகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பருத்தித் துணிப்பைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு

இந்நிகழ்ச்சி கே. ரூசோ , உதவிப் பொறியாளர் மற்றும் ஸ்வச்சதா ஹி சேவா 2026 இயக்கத்தின் ஒருங்கிணைப்பு அலுவலர், GRI; முனைவர் டி . டேவிட் ஜெயராஜ் பிராங்கிளின், NSS திட்ட ஒருங்கிணைப்பாளர், காந்திகிராம கிராமிய நிகர் நிலை பல்கலைக்கழகம்; மற்றும் முனைவர் மெ. முத்துக்குமார், NSS திட்ட அலுவலர் மற்றும் ஸ்வச்சதா ஹி சேவா 2026 இயக்கத்தின் ஒருங்கிணைப்பு அலுவலர், GRI ஆகியோரின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.

பல்கலைக்கழக ஆசிரியர்கள் பங்கேற்பு

காந்திகிராம கிராமிய நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் பின்வரும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் இப்பிரச்சாரத்தில் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தினர்:

முனைவர் K. மாரிமுத்து – பதிவாளர், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம்

முனைவர் T. அனந்த விஜயா – இணைப் பேராசிரியர், ஆங்கிலம் மற்றும் அயல்நாட்டு மொழிகள் பள்ளி

முனைவர் சந்து – இணைப் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர், இந்தித் துறை

முனைவர் A. ராஜேஸ்வரி – கௌரவ ஆசிரியர், புவிசார் தகவல் தொழில்நுட்ப மையம்

முனைவர் K. எழிலரசன் – கௌரவ ஆசிரியர், புவிசார் தகவல் தொழில்நுட்ப மையம்

முனைவர் M. சுபகுணசேகர் – கௌரவ ஆசிரியர், புவிசார் தகவல் தொழில்நுட்ப மையம்

முனைவர் S. குணசேகரன் – கௌரவ ஆசிரியர், புவிசார் தகவல் தொழில்நுட்ப மையம்

திண்டுக்கல் ரயில்வே ஊழியர்களின் ஒத்துழைப்பு

திண்டுக்கல் ரயில்வேயைச் சேர்ந்த செந்தில்குமார் – SMR/DG, திரு மனோகரன் – CHI/DG மற்றும்  சந்தோஷ்குமார் – CCI/DG ஆகியோர் தூய்மைப் பணிக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, நிகழ்ச்சிக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர்.

தூய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் NSS தன்னார்வலர்களுக்கு நிகழ்ச்சியின் நிறைவில் சிற்றுண்டியும் வழங்கப்பட்டது.

தூய்மையான சமூகத்திற்கான உறுதிமொழி

இந்நிகழ்ச்சி மூலம் மாணவர்கள், NSS தன்னார்வலர்கள், பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் இணைந்து நெகிழிப் பயன்பாட்டைக் குறைத்தல், துணிப்பைகளைப் பயன்படுத்துதல், மரங்களை வளர்த்தல், மழைநீரைப் பாதுகாத்தல் மற்றும் பொது இடங்களைத் தூய்மையாகப் பேணுதல் ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தினர்.

“ஸ்வச்சதா ஹி சேவா” என்ற உணர்வுடன் மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நேரடி பங்கேற்பு மூலம் நடைபெற்ற இந்நிகழ்ச்சி, தூய்மையான திண்டுக்கல் ரயில் சந்திப்பு மற்றும் தூய்மையான பாரதம் உருவாக்குவதற்கான சமூகப் பொறுப்புணர்வை எடுத்துக்காட்டியது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.