விடுதியில் போதைப்பொருள் பயன்பாடு ! கல்லூரி மாணவர் அடித்துக் கொலை !
கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவரை சக மாணவர்கள் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமுதன் (19), கோவை பிரீமியர் மில்ஸ் பகுதியில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். கல்லூரிக்கு வெளியே அறை எடுத்து நண்பர்களுடன் தங்கி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று இரவு சக மாணவர்களுடன் ஏற்பட்ட தகராறில் அமுதன் தாக்கப்பட்டதாக தெரிகிறது. இதில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், நண்பர்கள் இருசக்கர வாகனத்தில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அமுதன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சக மாணவர்கள் தாக்கியதில் அமுதன் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம், பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அமுதனின் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் கல்லூரி விடுதியில் தங்கி இருந்த அமுதன் சக மாணவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதை கல்லூரி நிர்வாகத்திற்கு புகார் அளித்திருக்கிறார். அப்போது போதை பொருள் பயன்படுத்திய கூறப்படும் சக மாணவர்கள் அமுதனை தாக்கியுள்ளனர். இதனால் கல்லூரி நிர்வாகத்தினர் அமுதனை வெளியே தங்குமாறு விடுதியில் இருந்து அனுப்பி உள்ளனர்.
இந்நிலையில் வெளியே நண்பரின் அறையில் தங்கிக் கொண்டிருந்த அமுதனை கல்லூரி அமுதனால் புகாரளிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் வெளியே இருந்த இளைஞர்கள் என 20 பேர் சேர்ந்து அமுதனை சரமாரியாக இரும்பு ராடு கல் உள்ளிட்டவற்றை கொண்டு தாக்கியிருக்கிறார்கள் . இதில் உடல் முழுவதும் கடுமையான படுகாயங்களுடன் அமுதன் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருக்கிறார் என மாணவனின் பெற்றோர் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.