வாகன சோதனை செய்யும் போலிசாருக்கு கமிஷர் போட்ட உத்தரவுகள்…

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அவர்களின் வாகன தணிக்கை சம்பந்தமான உத்தரவுகள்:
1) வாகன தணிக்கையில் வாகனத்தை நிறுத்தும் போது நிறுத்தாமல் செல்லும் வாகனத்தை துரத்தி பிடிக்க கூடாது. அவ்வாறு செல்லும் வாகனத்தின் நம்பரை குறித்து வைத்துக்கொண்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2)வாகன தணிக்கையில் குடும்பத்தினர் வயதானவர்கள் மற்றும் பெண்கள் செல்லும் வாகனங்களை தேவை இல்லாமல் நிறுத்தக்கூடாது.
3)நாம் நிறுத்தி நிறுத்தாமல் சென்று விட்டாரே என்ற ஈகோ மனதில் இருக்கக்கூடாது.
4)நடுரோட்டில் நின்று கொண்டும் , மறைவான இடங்களில் நின்று கொண்டும் வாகன தணிக்கை செய்யக்கூடாது.
5)வாகன தணிக்கையில் நாம் ஒருவர் செய்யும் சிறு தவறும் ஒட்டுமொத்த காவல்துறையை கலங்க படுத்தி விடும்,
எனவே நேர்மையுடன் இருக்க வேண்டும்.
6)ரோந்து செல்லும் காவலர்கள் தனியாக வாகன தணிக்கை செய்யக்கூடாது. உதவி ஆய்வாளர் உடன் சேர்ந்து தணிக்கை செய்ய வேண்டும். குற்ற தடுப்பு நடவடிக்கையாக, சந்தேகம் இருப்பின் வாகனத்தில் செல்லும் 18 முதல் 30 வயது வரை உள்ள ஆண்களை நிறுத்தி தணிக்கை செய்யலாம்.
7)வாகன தணிக்கையில் காவலர்களுடன் யாரேனும் தகராறு செய்தால், அவருடன் தகராறு செய்யாமல் உடனடியாக வீடியோ எடுக்க வேண்டும். அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
8)இரண்டு வாகனங்களுக்கு மேல் நிறுத்தி வாகன தணிக்கை செய்யக்கூடாது.
9)வாகன ஓட்டுனர்கள் செய்யும் தவறுகள் போக்குவரத்து விதிமுறை மீறல்கள் மட்டுமே. இது குற்ற நடவடிக்கை இல்லை என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
10)ரோந்து காவலர்கள் உடன் இருக்கும் TSP காவலர்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.