அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தொடரும் சட்டவிரோத மணல் கொள்ளை சர்ச்சை ! என்ன நடக்கிறது ?

திருச்சியில் அடகு நகையை விற்க

”திருச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக நடைபெறும் ஆற்றுமணல் திருட்டை தடுத்து நிறுத்த வேண்டும். தவறும்பட்சத்தில், நாங்களே களத்தில் இறங்கி பொதுமக்கள் துணையோடு சட்டவிரோத மணல் அள்ளும் கும்பலை பொக்லைன் இயந்திரம் லாரியோடு மடக்கிப்பிடித்து ஒப்படைக்கும் போராட்டத்தை நடத்தப்போவதாக” குறிப்பிட்டு தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் சார்பில், அவ்வமைப்பின் தலைவர் செல்ல.இராசாமணி திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவருக்கு கோரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில், “திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், திருவேங்கிமலை அருகில் உள்ள கொக்குவெட்டியான் கருப்பண்ணசாமி கோவில் அருகே நாமக்கல் – திருச்சி நெடுஞ்சாலையில் இருந்து பாதை அமைத்து காவிரி ஆற்றில் இருந்து தினசரி நூற்றுக்கணக்கான லாரிகளில் பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்தி மணல் திருடி  அனுப்பி வருகிறார்கள் என்று கடந்த மார்ச் மாதம் 08 ஆம் தேதியன்று தங்களுக்கும், காவல்துறையினர், பொதுப்பணித்துறையினர், கனிமவளத்துறையினர் மற்றும்  வருவாய்த்துறையினர்க்கு உடனடியாக இந்த மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

இதில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவித்திருந்தேன். அதன் பிறகு மணல் அள்ளுவது நிறுத்தப்பட்டது. மீண்டும் தேர்தல் நேரம் என்பதை பயன்படுத்திக்கொண்டு கடந்த 07/04/2026 முதல் தொடர்ந்து மீண்டும் அதே இடத்தில் காவிரி ஆற்றில் இருந்து தினசரி நூற்றுக்கணக்கான லாரிகளில் பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்தி மணல் திருடி  அனுப்பி வருகிறார்கள்.

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

இவை அனைத்தும் அந்த பகுதிக்குட்பட்ட காவல்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை,  கனிமவளத்துறை  அதிகாரிகள் ஒத்துழைப்போடு,  பாதுகாப்பாக லாரிகளை அனுப்பி வருவது வேதனை அளிக்கிறது. இதனால் தினசரி  அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

உடனடியாக இந்த மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மணல் கொள்ளைக்கு பயன்படுத்தும்  பொக்லைன் இயந்திரங்கள், லாரிகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட வேண்டும் தவறும் பட்சத்தில் தமிழ்நாடு மணல் லாரி  உரிமையாளர்கள் சம்மேளன பிரதிநிதிகள் நாங்களே பொதுமக்களை திரட்டி தங்களிடம் முறையாக மனு கொடுத்து திருட்டு மணல் எடுத்துச்செல்லும் லாரிகளையும், பொக்லைன் இயந்திரங்களையும் சிறைப்பிடித்து தங்களிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் விரைவில் ஈடுபடவுள்ளோம்” என்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த கடிதத்தின் நகலை பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் தலைமைப் பொறியாளர்;  புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் ஆணையர்; திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்;  புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் கனிமவளத்துறை உதவி இயக்குநர் உள்ளிட்டு சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

செல்ல.இராசாமணி
செல்ல.இராசாமணி

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இந்த விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் செல்ல.இராசாமணியிடம் பேசியபோது, “தமிழகத்தில் இ.டி. ரெய்டுக்குப்பிறகு அரசு மணல் குவாரிகள் செயல்படாத நிலையில், பல இடங்களில் சட்டவிரோதமாக மணல் அள்ளி வருகிறார்கள். தற்போது நாங்கள் சுட்டிக்காட்டும் தொட்டியம் பகுதியிலும் இதே நிலைதான். ஆற்றின் கரையை சேதப்படுத்தியிருக்கிறார்கள். அரசு மணல் குவாரி செயல்படுவதைப்போலவே, ஆற்றின் உள்ளேயே ரோடு போட்டிருக்கிறார்கள். டிரெய்லரில் பொக்லைன் இயந்திரங்களை ஏற்றிக்கொண்டு வந்து இரவோடு இரவாக மணல் அள்ளி வருகிறார்கள். நாளொன்றுக்கு 70 முதல் 100 லோடு மணல் அள்ளி வருகிறார்கள். ஒரு லாரிக்கு 5 யூனிட் வரை மணல் ஏற்றுகிறார்கள். யூனிட் ஒன்றுக்கு 8000 என்று கணக்கிட்டால் ஒரு லோடுக்கு 40,000 ஆகிறது. அதிகாரிகளை கையில் போட்டுக்கொண்டு வரைமுறையில்லாமல் மணல் அள்ளிவருகிறார்கள். ஆதாரத்துடன் புகார் அளித்தும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காதது வேதனையளிக்கிறது” என்கிறார்.

கலெக்டா் சரவணன்
கலெக்டா் சரவணன்

இந்த குற்றச்சாட்டு குறித்து, திருச்சி மாவட்ட ஆட்சியர் வே.சரவணனனை அங்குசம் சார்பில் தொடர்பு கொண்டோம். அவரது நேர்முக உதவியாளர் ராஜேந்திரன், நமது தரப்பு தகவலை கேட்டுக்கொண்டவர் “இந்த விவகாரம் தொடர்பாக தொட்டியம் காட்டுப்புத்தூரில் நடவடிக்கை எடுத்திருப்பதாக ஏ.டி. மைன்ஸ் லலிதா குறிப்பிடுகிறார். எந்த இடம் என்பதை குறிப்பிட்டு அவரிடமே சொல்லுங்கள் உரிய நடவடிக்கை எடுக்க சொல்கிறோம்.” என்பதாக தெரிவித்தார்.

மைன்ஸ் துறை சார்பில் தொடர்பு கொண்ட மைன்ஸ் ஆர்.ஐ. ராமர், “எங்களது கவனத்திற்கு வந்த உடனேயே களத்திற்கு சென்று லாரியை மடக்கிப் பிடித்திருக்கிறோம். நேற்றுகூட காட்டுப்புத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு எஃப்.ஐ.ஆர். பதிவாகியிருக்கிறது. லாரி ஒன்றை கைப்பற்றியிருக்கிறோம். தற்போது நாங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டும் நபர்கள் அனுப்பியுள்ள புகைப்படங்களில், பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்டதாக இருக்கிறது. இருந்தாலும், நாங்கள் மீண்டும் ஆய்வுக்கு சென்று கள நிலவரத்தை பதிவு செய்கிறோம்.” என்பதாக தெரிவித்திருக்கிறார்.

பொதுப்பணித்துறை மற்றும் ஏ.டி.மைன்ஸ் போன்ற அதிகாரிகளுக்கு களத்தில் இறங்கி லாரிகளை மடக்கிப்பிடிக்கவோ, வழக்குப் பதிவு செய்யவோ அதிகாரம் இல்லாத நிலையில், சம்பந்தபட்ட ஸ்டேஷன் போலீசாரை சார்ந்தே இதுபோன்ற பணிகளை மேற்கொள்வதில் இருக்கக்கூடிய நடைமுறை சிக்கல்களையும் குறிப்பிடுகிறார்கள், மணல் அரசியலின் உள்விவகாரம் அறிந்தவர்கள்.

உயர் அதிகாரிகள் பேச்சை கேட்டு ”லாரியை மடக்கிப்பிடிச்சா எங்களை ஏத்திட்டு போயிடுவான். இல்லை, அடியாள வச்சு வெட்டுனா எங்க உயிருக்கு என்ன உத்திரவாதம்” என்ற கேள்விதான் லோக்கல் போலீசார் தரப்பிலிருந்தும், வி.ஏ.ஓ., ஆர்.ஐ. போன்ற வருவாய்த்துறையினர் தரப்பிலிருந்தும் கேள்வி எழுப்புவதாகவும் குறிப்பிடுகிறார்கள்.

நடைமுறை சிக்கல்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென்பதே பொதுவான கோரிக்கையாக இருக்கிறது.

–              அங்குசம் புலனாய்வுக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.