நீங்களும் எழுத்தாளர் ஆகலாம் ! அழைக்கிறது திருச்சி தூய வளனார் கல்லூரி !
தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரியின் தமிழாய்வுத்துறையின் சார்பில் ஆண்டுதோறும், படைப்பாற்றல் பயிலரங்கை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறார்கள்.
படித்து பட்டம் பெறுவதற்கான படிப்பாக மட்டுமே சுருங்கி விடாமல், சமூகத்தை புரிந்து கொள்ளவும்; சமூகத்தின் வழியே தான் பெற்ற அனுபவத்தை கலை படைப்பின் வழியே மீண்டும் சமூகத்தின் நல் நோக்கத்திற்காக திரும்ப படைக்கும் வகையில் இத்தகைய பயிற்சிகளை திட்டமிட்டு நடத்தி வருகிறார்கள். கதை, கவிதை, எழுதுவதில் ஆர்வமுள்ள மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களின் தனித்திறன்களை செம்மையாக்கும் வகையில் இத்தகைய படைப்பாற்றல் பயிலரங்குகள் அமைந்திருக்கின்றன. ஆண்டுதோறும் மாணவர்கள் படைத்த படைப்புகளை தொகுத்து “விதை நெல்” என்ற தலைப்பில் தனி நூலாகவும் வெளியிட்டு வருகிறார்கள்.
திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரியின் சீரிய பணியின் தொடர்ச்சியாக, 2025 ஆம் ஆண்டிற்கான படைப்பாற்றல் பயிலரங்கு குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.
அங்குசம் செய்தி, திருச்சிராப்பள்ளி வாழ்வு வெளியீடு, வேர்கள் அறக்கட்டளை, அறக்கட்டளை மற்றும் காவிரிக் கவித்தமிழ் முற்றம் ஆகிய தோழமை அமைப்புகளுடன் இணைந்து 2025 செப்டம்பர் 18 மற்றும் 19 (வியாழன் & வெள்ளி) ஆகிய நாள்களில் படைப்பாற்றல் பயிலரங்கை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
பயிலரங்கின் தொடக்க விழாவில் கல்லூரியின் அதிபர் தந்தை, செயலர் தந்தை, முதல்வர் தந்தை, இணை முதல்வர் மற்றும் தோழமை அமைப்புகளின் ஆளுமைகள் முன்னிலையில், திருச்சிராப்பள்ளி எழுத்தாளர்கள் சங்கத்தின் கௌரவத் தலைவர் MJF Lion சௌமா.இராஜரெத்தினம் PDF அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்ற இருக்கிறார்.
அருள்முனைவர் சேவியர் அந்தோணி, சே.ச. கவிஞர் திருவைக்குமரன், முனைவர் ஸ்டீபன் மிக்கேல்ராஜ் மற்றும் தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரித் தமிழாய்வுத்துறைப் பேராசிரியர்கள் இணைந்து படைப்பாற்றல் பயிற்சிகளை வழங்க இருக்கிறார்கள்.
35 கல்லூரி மாணவர்கள் மட்டுமே இப்பயிற்சியில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. எனவே கவிதை, கதை, கட்டுரை உள்ளிட்ட படைப்புகளை எழுதும் எழுத்தாளராக உருவாகும் ஆர்வமுடைய, முழுமையாக இப்பயிற்சியில் பங்கேற்கும் திறனுடைய இரண்டு மாணவர்களை மட்டும் தெரிவு செய்து இப்பயிற்சிக்கு அனுப்பிவைக்கும்படி பேரன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
குறிப்பு:
* பதிவுக் கட்டணம் 250/- மட்டும் (பங்கேற்பாளர்களுக்கு இரண்டு நாள்களும் தேநீர், மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது)
* பங்கேற்பாளர்கள் முழு ஈடுபாட்டுடன் பங்கேற்க வேண்டும். முதல்நாள் மாலை கொடுத்தனுப்புகிற எழுத்துப்பணியைச் சிறப்பாகச் செய்துவரும் மனதுடையவராக இருத்தல் வேண்டும்.
* பயிலரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜா.சலேத் (அலைபேசி : 63814 93915) அவர்களைத் தொடர்பு கொண்டு 16.09.2025 மாலைக்குள் பெயர்களைப் பதிவு செய்யவும்.
பதிவு செய்ய இறுதி நாள் 16.09.2025
எழுத்தாற்றல் மீது காதல் கொண்ட மாணவர்கள் பங்கேற்று பயனடைய வாழ்த்துகள் !
— அங்குசம் செய்திப்பிரிவு.
Comments are closed, but trackbacks and pingbacks are open.