திருச்சி கே.ஏ.பி.வி. மேல்நிலைப் பள்ளியில் சைபர் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இணையவழி குற்றங்கள் மற்றும் ஆன்லைன் மோசடிகள் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்தும் வகையில், திருச்சி மாநகரம் தில்லைநகரில் உள்ள கே.ஏ.பி.வி. மேல்நிலைப் பள்ளியில் இன்று (16.10.2026) காலை சைபர் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்குப் பள்ளித் தலைமை ஆசிரியர் திருமதி திவ்யா சந்துரு தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட திருச்சி மாநகர சைபர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கே. பாலுசாமி, இணையவழி குற்றங்கள், ஆன்லைன் பண மோசடிகள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின்போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

Cybercrime awareness program!மேலும், தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் இணையவழி கொள்முதல் மற்றும் பணப் பரிவர்த்தனைகளின்போது பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும், சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைத் திறப்பதையும் தனிப்பட்ட வங்கித் தகவல்களைப் பகிர்வதையும் தவிர்க்க வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

Cybercrime awareness program!தொடர்ந்து, மாணவர்கள் சந்தோஷ் குமார், முகமது ஃபாசில் மற்றும் அண்ணாமலை ஆகிய மூவரும் சைபர் குற்ற விழிப்புணர்வு குறித்து உரையாற்றினர். இணையத்தைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது மற்றும் இணையவழி மோசடிகளில் இருந்து தற்காத்துக் கொள்வது தொடர்பான கருத்துகளை அவர்கள் எடுத்துரைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஆங்கில ஆசிரியர் சாய்ராம் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக, உடற்கல்வி ஆசிரியர் சந்தோஷ் குமார் நன்றியுரை வழங்கினார்.

மாணவர்களிடையே இணையப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி அமைந்தது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.