இருளடைந்த சாலைகள் ! தொடரும் சாலை விபத்துக்கள் !
லால்குடியில் இருந்து கூகூர் செல்லும் சாலை இந்த சாலை கொள்ளிடம் இடையேற்றுமங்கலம், பச்சாம்பேட்டை, திருமணமேடு வழியாக கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சாலையாக உள்ளது. தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த சாலை வழியாக பயணித்து வருகின்றனர். பஸ் போக்குவரத்து வசதியும் உள்ளது. இந்த சாலை எல் அபிஷேகபுரத்திலிருந்து தண்ணீர் பந்தல் வரை இருளடைந்த சாலையாக வருட கணக்கில் கிடக்கின்றது.
நேற்று இந்த சாலையின் வழியாக கூகூர் கிராமத்தை சேர்ந்த லோகநாதன் மாரியப்பன் என்ற இரண்டு பேர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது சாத்தமங்கலத்தில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த நபர் நேருக்கு நேராக மோதி கொண்டதில் மேற்படி நபர்கள் பலத்த காயம் ஏற்பட்டதில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்த வழியாக வேலைக்கு செல்பவர்கள் கல்லூரி மற்றும் பள்ளிக்கு சென்று இரவில் வீடு திரும்புவார்கள் மிகவும் மன அச்சத்தோடு திரும்புகின்றனர். இந்த இருளடைந்த சாலையை சமூக விரோதிகள் கஞ்சா மற்றும் மது அருந்துவதற்கான சாலையாக மாற்றி அங்கங்ககே உட்கார்ந்து மது குடித்துவிட்டு பாட்டில்களை உடைத்து போடுவதும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மீது தாக்குதல் நடத்தும் போதும் தொடர் கதையாக உள்ளது.

இந்த வழியாக செல்லும் பொது மக்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென்றால் அபிஷேகபுரம் கிராமத்தில் இருந்து தண்ணீர் பந்தல் வரை இருளில் கிடக்கும் சாலையில் மின்விளக்குகள் அமைப்பதை மிகவும் துரிதப் படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மிகவும் கலக்கத்துடன் தெரிவித்து வருகின்றனர். பள்ளிக்கூடம் செல்லும் இளம் வயது பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை. என்பதையும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதே போல் இருள் அடைந்து கிடக்கும் சாலைகளில் தெரு விளக்குகள் அல்லது சோலார் லைட் அமைத்து தர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. நேற்று நடந்த இந்த விபத்தால் ஒருவர் மிகவும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். இந்த கோரிக்கையை ஏற்கனவே கிராம மக்கள் அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்தும் எந்தவித பயனும் இல்லை. ஆகையால் மீண்டும் விபத்துக்கள் நடக்காமல் இருக்கவும். பொதுமக்கள் பாதுகாப்பிற்காக இந்த மின்விளக்கு அமைப்பதற்கும் சட்டமன்ற உறுப்பினர் கவனம் செலுத்துவார? செய்து தருவாரா? என்பதும் மிகப்பெரிய கோரிக்கையாக உள்ளது.
— சதா






Comments are closed, but trackbacks and pingbacks are open.