அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

‘டிமான்டி காலனி 3’ அதிர வைக்கும் சாம் சி.எஸ்.சின் பாடல்!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

இசையமைப்பாளர் சாம் சி எஸ் தனது தனித்துவமான இசை மொழியால் ஒவ்வொரு படத்திற்கும் தனி அடையாளத்தை உருவாக்கி வருகிறார். இப்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் ‘டிமான்டி காலனி 3’ படத்தின் முதல் பாடலான “ரத்தத்த தா” வெளியாகி இசை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

மோகன் ராஜன் எழுதிய பாடல் வரிகளுக்கு இசையமைத்து பாடியுள்ளார் சாம். சி.எஸ். பாடலின் ஒவ்வொரு வரியிலும் கதையின் இருண்ட மனநிலையை உணர்த்தும் வகையில் அவரது குரலும், இசையும் ஒன்றோடொன்று கலந்துள்ளன. ஹாரர் மற்றும் டார்க் தீம் கலந்த இசை அனுபவத்தை ரசிகர்களுக்கு இந்தப் பாடல் வழங்குகிறது.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

சாம் சி எஸ்
சாம் சி எஸ்

ஏற்கனவே ‘டிமான்டி காலனி 2’ படத்திற்கு தனது பின்னணி இசையால் ரசிகர்களை மிரள வைத்த சாம் சி எஸ், தற்போது ‘டிமான்டி காலனி 3’ படத்திற்கும் இசையமைத்து மீண்டும் தனது இசை மாயாஜாலத்தை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள சவுண்ட் டிசைன் மற்றும் இசைக் கோர்வை, படத்தின் உலகத்திற்குள் ரசிகர்களை அழைத்துச் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகிறது ‘டிமான்டி காலனி-3’. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பிஸியாக பணியாற்றி வரும் சாம் சி எஸ், தமிழில் தற்போது ரவிமோகனின் ‘கராத்தே பாபு’, கார்த்தியின் ‘சர்தார் 2’, புஷ்கர்–காயத்ரி இயக்கும் புதிய திரைப்படம், இயக்குநர் ஹெச். வினோத் – தனுஷ் கூட்டணி படம் உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

—  ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.