வைகைப்புயலுடன் ராசியான தனுஷ்!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

சுராஜ் டைரக்‌ஷனில் தனுஷ், தமன்னா காம்பினேஷனில் 2009-ல் ரிலீசான படம் ‘படிக்காதவன்’. எப்போதுமே டைரக்டர் சுராஜின் பெஸ்ட் சாய்ஸான வைகைப்புயல் வடிவேலுவும் இப்படத்தில் கமிட்டாகி, தனுஷ்-வடிவேலு காம்பினேஷனில் சில நாட்கள் காமெடி டிராக் ஷூட்டிங் நடந்தது. ஆனால் திடீரென தனுஷுக்கும் புயலுக்கும் சில சீன்களில் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் வடிவேலு நீக்கப்பட்டு, விவேக் உள்ளே வந்தார்.

பழைய சம்பவங்களையெல்லாம் மறந்து 16 ஆண்டுகளுக்குப் பிறகு வைகைப்புயலுடன் கைகுலுக்கியுள்ளார் தனுஷ். மூன்று பெரிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் தனுஷின் 56-ஆவது படத்தில் தான் இந்த இனிய சம்பவம் நடந்துள்ளது. மெகா ஹிட்டான ‘லப்பர் பந்து’ தமிழரசன் பச்சமுத்து டைரக்ட் பண்ணும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு செம வெயிட்டான கேரக்டராம். ப்ரீத்தி முகுந்தன் தான் ஹீரோயின். சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

சிவகங்கை மாரநாடு கருப்பணசாமி கோவிலில் சிறப்புப் பூஜைகளுடன் படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாகியுள்ளது. பூஜைக்கு வந்திருந்த அனைவருக்கும் தடபுடலாக கறி விருந்து நடந்தது. “இங்கே பின்னால் நிற்கும் கருப்பணசாமியையும் முன்னால் நிற்கும் உங்களையும் நம்பி படத்தை ஆரம்பித்துள்ளோம்” என டச்சிங்காக பேசினார் தனுஷ்.

—  ஆண்டவர்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.