வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை! பேரிடர் மீட்பு ஒத்திகை!
திருச்சி மாநகரில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில பேரிடர் மீட்பு பயிற்சி முடித்த காவல் ஆளிநர்களை தணிக்கை செய்தும், மீட்பு உபகரனங்களை சோதனை செய்தும், மீட்பு ஒத்திகையை காவல்துறை தலைவர், மத்திய மண்டலம் அவர்கள் பார்வையிட்டு, அறிவுரை வழங்கினார்கள்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் அவர்களது உடமைகளுக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மின்சார வாரியம் ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட அறிவுறுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்காக, இன்று மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.V.பாலகிருஷ்ணன் IPS., (பொறுப்பு:- திருச்சி மாநகரம்) அவர்கள் திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை மைதானத்தில் மாநில பேரிடர் மீட்புப் படை (State Disaster Response Force SDRF) பயிற்சி முடித்த காவல் ஆளிநர்களின் செயல்பாட்டை தணிக்கை செய்தும், பேரிடர் காலங்களில் மீட்பு பணிக்கு தேவைப்படும் உபகரனங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டும், மீட்பு பணி குறித்து ஒத்திகை நிகழ்ச்சியை பார்வையிட்டும், மீட்பு குழுவினருக்கு உரிய அறிவுரைகள் வழங்கினார்கள்.
பேரிடர் மீட்பு குழுவினர் திருச்சி மாநகரில் உள்ள பகுதிகளில் அதிகளவு மழைபெய்யும் இடங்களை தீவிரமாக கண்காணித்தும், பொதுமக்கள் அதிகம் கூடும் மற்றும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் மழைநீர் சுழ்ந்தால், அவர்களை பத்திரமாக மீட்டு வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களைப் பாதுகாப்பாகத் தங்க வைக்க தற்காலிக நிவாரண முகாம்கள், பள்ளி மற்றும் கல்லூரி முகாம்கள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய காவல் துணை ஆணைர்களுக்கு அறிவுறுத்தினார்கள். மேலும் பேரிடர் மீட்பு பணிக்கு நீச்சல் தெரிந்த காவல் ஆளிநர்கள் மீட்பு பணிக்கு நியமித்தும், மீட்பு குழுவில் ஈடுபடும் காவலர்கள் நிலையான செயல்பாட்டு நடைமுறையை (SOP) ன்படி, மீட்பு பணிகளில் ஈடுபடுமாறு மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.
மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்களின் ஆய்வின்போது திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் வடக்கு, தெற்கு மற்றும் தலைமையிடம் ஆகியோர்கள் உடனிருந்தார்கள்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.