அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ! குமுறலில் கூட்டணிக் கட்சிகள் !

தமிழ்நாடு தேர்தல் களம் - 2026

திருச்சியில் அடகு நகையை விற்க

திமுக கூட்டணியில் இழுபறிக்குப் பின் சிபிஐ 5 தொகுதிகளை ஏற்றுக் கொண்டது. நீண்ட இழுபறிக்குப் பின் சிபிஎம் 5 தொகுதிகளைப் பெற்றுக் கொண்டது. விசிக இரட்டை இலக்கத்தில் தொகுதி வேண்டும் என்றும், திமுகவோடு நீண்டநாள் பயணம் செய்திருக்கிறோம். திமுகவின் வெற்றிக்கு உதவியிருக்கிறோம் என்று இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைக் கேட்டு விசிக மென்மையான நெருக்கடியைத் திமுகவுக்குத் தந்து கொண்டிருந்தது. திமுக தரப்பில் விசிகவுக்கு மொத்தம் 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதில் 6 தனித் தொகுதிகள் 2 பொது தொகுதிகள். திருமாவளவன் 8 தொகுதிகளை ஏற்றுக் கொண்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு செய்தியாளர்களைச் சந்திக்கும்போது,“கூட்டணி அமைப்பது என்றால் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். இப்போது பெற்றுள்ள 8 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்” என்று கூறினார்.

சமூக ஊடகங்களில் விசிக தரப்பில் கொந்தளிப்பு அதிகமாகவே இருந்தது. இரட்டை இலக்கம் கொடுக்காமல் திமுக ஏமாற்றிவிட்டது. ஒடுக்கப்பட்டோருக்கான கட்சிக்கு வாய்ப்பு தர திமுக மறுத்துவிட்டது என்ற ரீதியில் பதிவுகள் முகநூலில் அதிகம் இடம் பெற்றன. 24ஆம் நாள் இரவு திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் வழங்கப்பட்டு, ஒப்பந்தம் கையொழுத்தானது. இதனைத் தொடர்ந்து தற்போது கூட்டணிக்கு வந்த தேமுதிகவிற்கு 10 தொகுதிகளா? 2011க்குப் பிறகு தேமுதிக எந்த தேர்தலில் வெற்றி பெற்றது என்றும் 2016 மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த் அவர்களே தோல்வி அடைந்தார். 10 தொகுதிகள் மற்றும் +1 மாநிலங்களவை உறுப்பினர் வழங்கியிருப்பது எங்களை திமுக உதாசீனப்படுத்திவிட்டது என்று விசிக, மதிமுக, சிபிஐ, சிபிஎம் தரப்பு தொண்டர்கள், ஆதரவாளர்கள் எழுதிய பதிவுகள் முகநூலில் அதிகம் பகிரப்பட்டன.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

விசிகமதிமுக தொண்டர்கள் ஒருபடி மேலேபோய்,“தலைவரும், இளந்தலைவரும் கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும். அல்லது மறுபரிசீலனை செய்து, கமல்ஹாசன் போல் தொகுதிகள் வேண்டாம், திமுகவை ஆதரிப்போம் என்று முடிவெடுக்கவேண்டும்” என்ற வகையில் பதிவுகள் முகநூலில் வலம் வந்தன. எல்லா கட்சியின் தலைவர்களும், 2ஆம் கட்ட தலைவர்களும் அமைதியாகவே இருந்தனர். சிபிஎம், சிபிஐ ஆதரவாளர்கள் இருகட்சிகளும் மக்களுக்கு ஆற்றிய பணியைப் பட்டியலிட்டனர். இதுபோன்ற போராட்டங்களை தேமுதிக எப்போதாவது நடத்தியுள்ளதா? என்றும் திமுகவுக்கு கேள்விகளை முன்வைத்தனர்.

தேமுதிக முதலில் பாஜகவோடும் பின்னர் அதிமுகவோடும் கூட்டணி பேசியது என்பதை அக் கட்சியின் பிரேமலதா வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டுள்ளார். கூட்டணிப் பேச்சுவார்த்தையில் எங்களுடைய கோரிக்கையை முன்வைப்பதில் என்ன தவறு? என்றும் கேட்டுள்ளார். திமுக அணிக்குள் தேமுதிக வரும்போதே 12 சட்டமன்ற தொகுதிகள் + 1 மாநிலங்களவை உறுப்பினர் என்ற கோரிக்கையை திமுக ஏற்றுதான் அக் கட்சி திமுக கூட்டணிக்குள் வந்தது.

முதல்வர் பிறந்தநாள்

தேமுதிகவுக்கு 10 தொகுதிகள்திமுக, தேமுதிகவின் கோரிக்கையை ஏற்று மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்கியது. தொடர்ந்து தேமுதிக கேட்ட 12 தொகுதிகளில் 10 தொகுதிகளை வழங்கியது. கூட்டணிக் கட்சிகளிடம் புதிய கட்சிகள் வந்துள்ளன தொகுதிகளைக் குறைத்து கொள்ளுங்கள் என்ற கோரிக்கையை வைத்து கெடுபிடி காட்டி தொகுதிகளைக் கிள்ளிக் கொடுத்த திமுக, எப்படி தேமுதிகவிற்கு 10 தொகுதிகளை அள்ளிக் கொடுத்தது என்ற கேள்வி சமூக ஊகடங்களை அதிரவைத்தது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

திமுக 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகளை 2024 மக்களவைத் தேர்தல் முடிந்தவுடன் தொடங்கிவிட்டது. முதலில் தமிழ்நாட்டில் உள்ள ஏறத்தாழ 60ஆயிரத்திற்கு மேல் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு முகவர்களை நியமித்தது. ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் துணை முகவர்களை நியமித்தது. ஒரு வாக்கு சாவடியில் உள்ள 1000 வாக்காளர்களை 100ஆகா பிரித்து 10 பேர் கொண்ட குழுவிடம் வாக்குச் சாவடிகள் ஒப்படைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.

அண்மையில் SIR பணிகளின்போது இந்த முகவர்கள்தான் இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டவர்களுடன் இணைந்து வாக்காளர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து வாக்காளர் பட்டியல் வெளிவந்தவுடன் திமுக ஐடிவிங் மொபைல் ஆப்-இல் வாக்குச் சாவடி முகவர்கள் 1000 பேர் உள்ள வாக்கு சாவடியில் உள்ள 250 குடும்பங்களில் உள்ள பெண்களைச் சந்தித்து வாக்கு கேட்கவேண்டும். உடன் திமுகவின் சாதனைகள் அடங்கிய புத்தகம் வழங்கவேண்டும். மேலும் அவற்றைப் படம் பிடித்து மொபைல் ஆப்-இல் பதிவேற்றம் செய்யப்படவேண்டும். எங்கே குறைபாடுகள் உள்ளனவோ அங்கே மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகங்கள் முடுக்கிவிடப்பட்டு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இறுதி வாக்காளர் பட்டியல்: தமிழ்நாட்டில் ஆண் வாக்காளர்களை விட.. பெண் வாக்காளர்கள் அதிக அளவில் நீக்கம் | Special Intensive Revision SIR: More woman voters removed from ...தேர்தல் வெற்றிக்கு முதன்மை காரணம் வாக்குச் சாவடி முகவர்களை அமைப்பது முதல் பணி. திமுக 68ஆயிரம் வாக்குச் சாவடி முகவர்களை அமைத்துள்ளது. தேமுதிக 36ஆயிரம் முகவர்களை அமைத்துள்ளது. காங்கிரஸ் 30ஆயிரம் முகவர்களை நியமித்துள்ளது. திமுக கூட்டணியில் உள்ள சிபிஐ 1,443 முகவர்களையும், விசிக 250 முகவர்களையும் (234 மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்) நியமித்துள்ளது. திமுக கூட்டணியில் உள்ள மற்றக் கட்சிகள் வாக்குச்சாவடி முகவர்களை அமைக்கவில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

திமுக கூட்டணியில் அதிகமான வாக்குச் சாவடி முகவர்களை நியமித்த கட்சி தேமுதிக என்ற அடிப்படையிலும், பாமக வலுவாக வட மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களிலும் கணிசாமான வாக்கு வங்கியை தேமுதிக வைத்துள்ளது என்றும் தவாக வேல்முருகன் விலகிய நிலையில், வன்னியர் எதிர்ப்பு வாக்குகளை ஒருமுகப்படுத்த தேமுதிக பயன்படும் என்று திமுக அதிகாரப்பூர்வமாக எண்ணிய நிலையில்தான் 10 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன என்று திமுக தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

2026 சட்டமன்ற தேர்தலில் கடந்த 10 ஆண்டுகள் வெற்றி பெறாமல் இருந்த தேமுதிக மாநிலங்களவையில் ஒரு உறுப்பினரைப் பெற்றுவிட்டது. 10 தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெறவும் வாய்ப்புள்ளது என்று கூறப்படுகின்றது. தேமுதிகவை திமுக மீண்டும் உயிர்ப்போடு இயங்க வைத்துள்ளது. எல்லாம் சரி….. மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது மே 4ஆம் நாள் தெரிந்துவிடும்.

—   ஆதவன்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.