2024 மார்ச் – 22  : திருச்சியில் நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டம் ! முதல்வர் பங்கேற்பு – போக்குவரத்து மாற்றம் !

அத்தியாவசிய மற்றும் அவசரத் தேவைக்கான போக்குவரத்திற்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில் மதியம் 12 மணி முதலாக வழக்கமான வழித்தடத்தில் பயணிப்பதற்கான ஏற்பாட்டையும் திருச்சி மாவட்ட போலீசார் வழங்கியிருக்கிறார்கள்.

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

2024 மார்ச் – 22  : திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் முதல்வர் பங்கேற்பு – போக்குவரத்து மாற்றம் !

2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தை திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில், திருச்சியிலிருந்து தொடங்கி வைக்கிறார், திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின்.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

மார்ச்-22 அன்று திருச்சி மாவட்டம் சிறுகனூரில் நடைபெறும் அறிமுக கூட்டத்தில் திருச்சி மற்றும் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வைக்கிறார்.

முதல்வர் பங்கேற்கும் விழா என்பதோடு, கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் அமைச்சர்களும் இரு மாவட்டங்களைச் சேர்ந்த கட்சி பிரதிநிதிகளும் தொண்டர்களும் பெருந்திரளாகப் பங்கேற்கும் கூட்டமாக அமைந்திருப்பதன் காரணமாக, திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றங்களை அறிவித்திருக்கிறார்கள், திருச்சி மாவட்ட போலீசார்.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

அனைத்து கனரக வாகனங்களும் கண்டிப்பாக காலை 10.00 முதலாகவே கீழ்க்காணும் அறிவிப்பின்படி வழித்தட மாற்றத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவித்திருக்கிறார்கள். அறிமுக கூட்டத்தில் பங்கேற்கும் வாகனங்கள் மட்டுமின்றி;

அத்தியாவசிய மற்றும் அவசரத் தேவைக்கான போக்குவரத்திற்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில் மதியம் 12 மணி முதலாக வழக்கமான வழித்தடத்தில் பயணிப்பதற்கான ஏற்பாட்டையும் திருச்சி மாவட்ட போலீசார் வழங்கியிருக்கிறார்கள்.

இது தொடர்பாக, திருச்சி மாவட்ட போலீசாரின் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கீழ்க்காணும் போக்குவரத்து வழித்தட மாற்றத்தை அறிவித்திருக்கிறார்கள்.

அனைத்து கனரக வாகனங்கள்

  சென்னையிலிருந்து திண்டுக்கல் நோக்கி செல்லும், அனைத்து வாகனங்களும் பெரம்பலுார் மாவட்டம் பெரம்பலுார் பைபாஸ் ரோடு வழியாக துறையூர், முசிறி, குளித்தலை, மணப்பாறை, வையம்பட்டி வழியாக செல்லவேண்டும். சென்னையிலிருந்து மதுரை நோக்கி செல்லும், அனைத்து கனரக வாகனங்களும் பெரம்பலுார் மாவட்டம் பெரம்பலுார் பைபாஸ் ரோடு வழியாக துறையூர், முசிறி, குளித்தலை, மணப்பாறை, புத்தாநத்தம், துவரங்குறிச்சி வழியாக செல்லவேண்டும். மதுரையிலிருந்து சென்னை நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும், விராலிமலை வழியாக மணப்பாறை, குளித்தலை, முசிறி, துறையூர், பெரம்பலுார் வழியாக செல்லவேண்டும்.

♦  சென்னையிலிருந்து கரூர் நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும், பெரம்பலுார் மாவட்டம் பெரம்பலுார் பைபாஸ் ரோடு வழியாக துறையூர், முசிறி, குளித்தலை, கரூர் சென்று வரவேண்டும்.

♦  கரூரிலிருந்து தஞ்சாவூர் செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் குளித்தலை, முசிறி, துறையூர், பெரம்பலுார், அரியலுார், கீழப்பழூர், திருமானூர், திருவையாறு வழியாக தஞ்சாவூர் சென்று வரவேண்டும்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

சேலத்திலிருந்து தஞ்சாவூர் நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் மைக்கேல்நாயக்கன்பட்டி, தொட்டியம், முசிறி, துறையூர், பெரம்பலுார், அரியலுார், கீழப்பழூர், திருமானுார், திருவையாறு வழியாக தஞ்சாவூர் சென்று வரவேண்டும்.

♦  சென்னையிலிருந்து ராமநாதபுரம் நோக்கி செல்லும், அனைத்து கனரக வாகனங்களும் பெரம்பலுார் மாவட்டம் பெரம்பலுார் பைாபாஸ் ரோடு வழியாக குன்னம், அரியலுார், கீழப்பழூர், புள்ளம்பாடி, கொள்ளிடம் ”Y’ ரோடு, திருச்சி பால்பண்ணை, திருவெறும்பூர், துவாக்குடி ரிங்க் ரோடு, கும்பங்குடி ஜங்சன், கீரனூர் வழியாக சென்று வரவேண்டும்.

♦  தஞ்சாவூரிலிருந்து மதுரை நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் துவாக்குடி டோல்பிளாசா, துவாக்குடி ரிங் ரோடு, பஞ்சப்பூர், மதுரைரோடு, விராலிமலை, வளநாடு கைக்காட்டி, துவரங்குறிச்சி வழியாக சென்று வரவேண்டும்.

♦  தஞ்சாவூரிலிருந்து திண்டுக்கல் நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் துவாக்குடி டோல்பிளாசா, துவாக்குடி ரிங் ரோடு, பஞ்சப்பூர், மதுரைரோடு, விராலிமலை, மணப்பாறை ரோடு. மணப்பாறை அரசுமருத்துவமணை, வையம்பட்டி வழியாக சென்று வரவேண்டும்.

 

அனைத்து இலகுரக வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்கள்

 

♦  சென்னையிலிருந்து மதுரை நோக்கி செல்லும் அனைத்து இலகுரக வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்களும், பாடாலுார், தச்சங்குறிச்சி, பூவாளுர், கொள்ளிடம் ”Y” ரோடு, திருச்சி வழியாக செல்லவேண்டும்.

♦  சென்னையிலிருந்து திண்டுக்கல் நோக்கி செல்லும் அனைத்து இலகுரக வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்களும், பாடாலுார், தச்சங்குறிச்சி, பூவாளுர், கொள்ளிடம் ”Y” ரோடு, திருச்சி வழியாக செல்லவேண்டும்.

♦  மதுரையிலிருந்து சென்னை நோக்கி செல்லும் அனைத்து இலகுரக வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்களும், கொள்ளிடம் ”Y” ரோட்டில் திருப்பிவிடப்பட்டு, நொச்சியம், மண்ணச்சநல்லுார், துறையூர், பெரம்பலுார் வழியாக செல்லவேண்டும்.

♦  திண்டுக்கலிலிருந்து சென்னை நோக்கி செல்லும் அனைத்து இலகுரக வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்களும், கொள்ளிடம் ”y” ரோட்டில் திருப்பிவிடப்பட்டு, நொச்சியம், மண்ணச்சநல்லுார், துறையூர், பெரம்பலுார் வழியாக செல்லவேண்டும்.” என்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

– அங்குசம் செய்திப் பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.