கெட்ட வார்த்தையில் பேசினாரா, அமைச்சர் ? பகீர் கிளப்பிய பாமக எம்எல்ஏ !

அவருக்கு வன்னியர் பிடிக்காது என தம்பிகள் சொல்றாங்க. நாம மட்டமா” என எரியும் தீயில் எண்ணெய் விட்டது போல, பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் பதிவிட்டிருக்கிறார்.

0

கெட்ட வார்த்தையில் பேசினாரா, அமைச்சர் ?
பாமக எம்எல்ஏ கிளப்பிய பகீர் !

னது தொகுதியில் பத்திரபதிவுகளில் உள்ள சிக்கல் தொடர்பாக, அத்துறை அமைச்சர் மூர்த்தியை தொலைபேசியில் அழைத்ததாகவும்; மறுமுனையில் அமைச்சர் தகாத வார்த்தைகளால் தன்னை திட்டி அவமானப்படுத்திவிட்டதாகவும் பகீர் கிளப்பியிருக்கிறார், பாமக சேலம் சட்டமன்ற மேற்கு தொகுதி உறுப்பினர் அருள்.

2 dhanalakshmi joseph
பாமக அருள் முகநூல் பதிவு

இதுதொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அருள், ”அவருக்கு வன்னியர் பிடிக்காது என தம்பிகள் சொல்றாங்க. நாம மட்டமா” என எரியும் தீயில் எண்ணெய் விட்டது போல, பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் பதிவிட்டிருக்கிறார்.

- Advertisement -

- Advertisement -

இந்த விவகாரம் தொடர்பாக, தனியார் ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவித்த அருள், தனக்கும் அமைச்சருக்கும் இதற்கு முன்னர் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்து வந்ததாகவும்; பழையதை மனதில் வைத்துக் கொண்டுதான் இப்போது இப்படி பேசியிருக்கிறார் என்பதாகவும் கருத்தை தெரிவித்திருக்கிறார்.

4 bismi svs

பொதுவில் அமைச்சர் மூர்த்தி, எப்போதும் அப்படித்தான் பேசுவார் என்றும் சொல்கிறார்கள். தொலைபேசியில் அருள் பேசியபோது, அங்கு வேறு யாரையோ அமைச்சர் திட்டிக் கொண்டிருந்ததாகவும், அருள் அதை தவறாக புரிந்து கொண்டு பெரிதுபடுத்தி விட்டார் என்றும் சொல்கிறார்கள்.

பொதுவெளியில் அமைச்சர் அநாகரீகமாக பேசலாமா? என்ற கேள்வி ஒருபக்கம் இருக்க, தேர்தல் நேரத்தில் வன்னியர்னா மட்டமா? என்று தனது சாதிய சொந்தங்களை உசுப்பேத்திவிடும் வகையில் பாமக எம்.எல்.ஏ. அருள் தனது முகநூலில் பதிவிடலாமா? என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.

இந்நிலையில், ”சேலம் சட்டமன்ற மேற்கு தொகுதி உறுப்பினர் மற்றும் தமிழக சட்டப்பேரவை பாமக கொரடாவாகவும் உள்ள அருள் அவர்களை அலைபேசியில் அவதூறாகவும் அநாகரிகமாகவும் பேசி மிரட்டல் விடுத்த பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி மதுரை மாநகர் மாவட்ட பாமக சார்பில் மாவட்ட செயலாளர் எஸ் கே தேவர் தலைமையில் மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ராஜ்குமார், மாவட்டத் தலைவர் பாலமுருகன் மாவட்ட இளைஞரணி தலைவர் கார்த்திக் மாவட்ட கலை இலக்கியப் பிரிவு செயலாளர் செல்லப்பாண்டி உள்ளிட்டோர் மதுரை மாநகராட்சி மாநகர காவல்  ஆணையாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர். மேலும் உரிய நடவடிக்கை எடுக்க காலதாமதப்படுத்தினால் அமைச்சர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் நேரத்தில் வெறும் வாயை மெல்லுவோர்க்கு வெற்றிலை பாக்கை கையில் கொடுத்த கதையா போச்சேனு புலம்புகிறார்கள், ஏரியா வாசிகள்!

 ஷாகுல், படங்கள் : ஆனந்த்.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.