அமேசான் பிரைம் ஓடிடியில் ‘ கேப்டன் மில்லர் ‘ புதிய சாதனை !

இதுவரை எந்தவொரு இந்தியத் திரைப்படமும் செய்யாத புதிய சாதனை. தொடர்ந்து 2 வாரமாக, இப்படம் டிரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது.

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அமேசான் பிரைம் ஓடிடியில் ‘ கேப்டன் மில்லர் ‘ புதிய சாதனை!

த்ய ஜோதி பிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்க, தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், இவ்வருட பொங்கல் கொண்டாட்டமாக, ஜனவரி 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “கேப்டன் மில்லர்”. இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் பாராட்டுக்களைக் குவித்தது.

Sri Kumaran Mini HAll Trichy

வரலாற்றுப் பின்னணியில், ஆங்கிலேயர் காலகட்டத்தில் நடக்கும் கதையை மையப்படுத்திய இப்படத்தில், தனுஷ், பிரியங்கா மோகன் முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க, சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய பாத்திரங்களில் இணைந்து நடித்திருந்தனர்.

பெரும் நட்சத்திரக் கூட்டணியில், உயர்தர தொழில்நுட்பக் கலைஞர்களின் கைவண்ணத்தில், வரலாற்றுப் பின்னணியில் அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் வெளிவந்த இப்படம், திரை ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்களைக் குவித்தது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

திரையரங்குகளில் வெற்றி பெற்ற கேப்டன் மில்லர் படம், கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் உலகம் முழுக்க ஸ்ட்ரீம் செய்யப்பட்டது. வெளியான முதல் வாரத்திலேயே, உலகம் முழுக்க 14 நாடுகளில் டாப் 5 வரிசையில் இப்படம் இடம்பிடித்து சாதனை படைத்தது. மேலும் இந்தியா உட்பட 9 நாடுகளில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தது.

Flats in Trichy for Sale

அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி 40 நாட்களை கடந்த நிலையில், இன்றளவிலும் இந்தியா மட்டுமல்லாது, தான்சானியா போன்ற ஆப்ரிக்க நாடுகளிலும், மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங் போன்ற ஆசிய நாடுகளிலும், பஹ்ரைன், கத்தார், குவைத், போன்ற ஐக்கிய அரபு நாடுகளிலும் தொடர்ந்து முதல் 5 இடங்களில் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.

கடந்த 8ஆம் தேதி வெளியான இப்படத்தின் இந்தி பதிப்பு, பல்வேறு புலம்பெயர் நாடுகளில் உள்ள பார்வையாளர்களைக் கவர்ந்த நிலையில், இந்தியாவில் முதல் 10 இடங்களுக்குள் நம்பர் 1 படமாக இடம் பிடித்துள்ளது. மேலும் தொடர்ந்து 2 வாரமாக, இப்படம் முதல் இடத்தில் உள்ளது. இதுவரை எந்தவொரு இந்தியத் திரைப்படமும் செய்யாத புதிய சாதனை இது.

மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.