அண்ணா விழாவில் இரண்டாக உடைந்த திருச்சி திமுக

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அண்ணா விழாவில் இரண்டாக உடைந்த திருச்சி திமுக

திருச்சியில் பேரறிஞர் அண்ணாவின் 112-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணாவின் சிலைக்கு திமுகவின் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது. அந்த மாலை அணிவிக்கும் நிகழ்வில் திமுகவினர் இரண்டு குழுவாக தனித்தனியாக மாலை அணிவித்தனர். இதன் மூலம் உட்கட்சிப் பூசல் வெளிப்படையாக வெளியாகிறது.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

கே.என் நேரு முதன்மைச் செயலாளராக இருப்பதால் சென்னையில் இருந்தே பெரும்பாலும் கே.என்.நேருவால் செயல்பட முடிகிறது. மேலும் திமுகவின் முப்பெரும் விழா, அண்ணா பிறந்தநாள், பெரியார் பிறந்த நாள், கட்சி துவக்கப்பட்ட நாள் என்று வரிசையாக திமுகவின் நிகழ்வுகள் உள்ளதாலும். தற்போது சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி இருப்பதால் நேருவால் திருச்சிக்கு வர முடியவில்லை. அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க சென்னைக்கு சென்றுவிட்டார்.

இப்படி தற்போதைய திருச்சி திமுகவின் அடையாளமாக இருக்க கூடிய இரண்டு நபர்களும் திருச்சியில் இல்லாத நிலையில் அண்ணாவின் பிறந்தநாள் நிகழ்ச்சியை திருச்சி திமுக ஏற்பாடு செய்திருந்தது. அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவிக்கும் பொறுப்பு திமுகவில் திருச்சி மூன்றுமாக மாவட்டமாக பிரிக்கப்பட்டு இருப்பதால் மூன்று மாவட்ட பொறுப்பாளர்களும் ஒருங்கிணைந்து அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவிப்பதாக முடிவெடுக்கப்படுகிறது. போலீசும் அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தை மாலை அணிவிப்பதற்காக ஒதுக்குகின்றனர்.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இந்நிலையில் காடுவெட்டி தியாகராஜன், வைரமணி, அன்பழகன் போன்ற திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இயங்கக்கூடிய தெற்கு மாவட்டம் சார்பாக தனியாக மாலை அணிவிக்கப்பட்டது.


இது பற்றி திமுக நிர்வாகிகள் இடம் கேட்கும் பொழுது மத்திய மாவட்டம், தெற்கு மாவட்டம், வடக்கு மாவட்டம் என்ற மூன்று மாவட்டங்களும் ஒருங்கிணைந்து மாலை அணிவிப்பதாக தான் முதலில் முடிவெடுத்து இருந்தோம். மாலை அணிவிக்கும் நிகழ்வின்போது தெற்கு மாவட்ட நிர்வாகிகளையும் கூப்பிட்டோம் ஆனால் அவர்கள் வர மறுத்து விட்டனர். அதனால் மத்திய மற்றும் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் இணைந்து சென்று மாலை அணிவித்தோம் என்று கூறினர்.

மேலும் இதுபற்றி தெற்கு மாவட்ட நிர்வாகிகளிடம் கேட்கும் பொழுது கட்சித் தலைமைக்கு ஒவ்வொரு மாவட்டத்தினுடைய செயல்பாடுகளும் தனித் தனியாக அனுப்ப வேண்டும் என்பதால் நாங்கள் தனியாக மாலை அணிவித்து, புகைப்படம் எடுத்து அனுப்பி இருக்கிறோம் என்று கூறுகின்றனர்கள்.

நேருவின் தலைமையை ஏற்று மத்திய மாவட்டம் மற்றும் வடக்கு மாவட்டம் ஒன்றாக செயல்பட. மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இயங்கக்கூடிய தெற்கு மாவட்டம் தனியான அரசியல் பாதை வகுத்துக் கொண்டு செல்வது நேருவுக்கும் மகேஷுக்கும் இருக்கக்கூடிய அரசியல் உரசல் என்று கூறப்படுகிறது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.