அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

குற்றப் பின்னணி இல்லா திமுக ! சூடுபிடிக்கும் 2026 தேர்தல் !

திருச்சியில் அடகு நகையை விற்க

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. 234 தொகுதிகளில் யாருக்கு வெற்றிக் கனிகள் குவியப்போகின்றன?

மீண்டும் வாய்ப்பு பெறப்போவது சிட்டிங் எம்.எல்.ஏ.க்களா, அல்லது சட்டப்பேரவைக்குள் புதிய முகங்கள் நுழையப்போகிறார்களா? என்ற கேள்விகள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.

இந்த வார MAY 6 அங்குசம் இதழில்…

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளையும் கைப்பற்றி அ.தி.மு.க. தங்களது பலத்தை உறுதி செய்திருந்தது.

இந்த பின்னணியில், 2026 சட்டமன்றத் தேர்தலில் கோவையின் பத்து தொகுதிகளையும் மீட்டெடுக்கும் இலக்குடன் திமுக தலைமை தீவிர வியூகம் வகுத்துள்ளது.

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

அந்த வியூகத்தின் மையப் பொறுப்பாளராக அமைச்சர் செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளதோடு, களப்பணிகளை ஒருங்கிணைத்து வெற்றிக் களத்தை அமைப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வே.செந்தில் பாலாஜி
வே.செந்தில் பாலாஜி

புதுமுகங்களுக்கு முன்னுரிமை 

‘க்ளீன் இமேஜ்’ வேட்பாளர்கள் என உறுதி

கோவையில் உள்ள பத்து தொகுதிகளிலும் பெரும்பாலும் புதுமுகங்களே அறிமுகமாக உள்ளதாகவும், தகுதி வாய்ந்தவர்கள், குற்றப் பின்னணி ஏதுமில்லாதவர்கள் என்ற அடிப்படையில் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதே நேரத்தில், பத்து தொகுதிகளில் மூன்று தொகுதிகள் இளைஞரணி நிர்வாகிகளுக்கு ஒதுக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், நீண்ட காலமாக சீட் பெற தீவிரமாக களப்பணிகளில் ஈடுபட்டு வந்த சில மூத்த நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், அரசியல் ரீதியாக ‘ஆஃப் லைன்’ நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் திமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி கோவையில் பரிசீலனையில் உள்ள வேட்பாளர்கள் அறிவாலய வட்டாரங்களில் வெளியாகும் தகவலின் அடிப்படையில், கோவை மாவட்டத்தில் தற்போதைக்கு பரிசீலனையில் உள்ள முக்கியப் பெயர்கள் வருமாறு:

மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதி –

கூடலூர் நகராட்சி தலைவர், கூடலூர் நகர திமுக செயலாளர் அறிவரசு

கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதி –

சர்க்கார் சாமக்குளம் ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.பி.சுரேஷ்குமார்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி –

கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொ.அ. ரவி

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி –

திமுக மாணவரணி செயலாளர் இரா. ராஜீவ் காந்தி

சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி –

கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் செந்தமிழ்ச் செல்வன்

சூலூர் சட்டமன்றத் தொகுதி –

கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன்

பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி – திமுக ஐடி விங் இணைச் செயலாளர் டாக்டர் மகேந்திரன்

மாற்றங்களுக்கு வாய்ப்பு…

‘இப்போதைக்கு இதுதான் நிலவரம்’

இப்பட்டியலில் சில தொகுதிகளில் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும், இறுதி பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் வரை அரசியல் கணக்கீடுகள் தொடரும் என்றும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“இப்போதைக்கு இதுதான் நிலவரம். களநிலை, கட்சி அமைப்பு, சமூகச் சமநிலை, வெற்றி வாய்ப்பு ஆகிய அடிப்படைகளில் இறுதி முடிவு எடுக்கப்படும்,” என திமுக மூத்த நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

கோவை அரசியல் களத்தில், செந்தில் பாலாஜி தலைமையிலான இந்த புதிய அணுகுமுறை, இளைஞர்கள் மற்றும் புதுமுகங்களை முன்வைத்து திமுகவை மறுசீரமைக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

2021-ல் அ.தி.மு.க. கோட்டையாக இருந்த கோவையை, 2026-ல் திமுக கைப்பற்றுமா? என்பதே இப்போது மாவட்ட அரசியல் களத்தின் மையக் கேள்வியாக மாறியுள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.