கட்சிகள் மாறினாலும் மாறாத காட்சிகள் !

தஞ்சை மாவட்டம் பூதலூர் – திருக்காட்டுப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் பூதலூரில் இருந்து 1.கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது விண்ணமங்கலம். இங்கு சுமார் 2500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களின் குடிநீர் ஆதாரமாக, அங்கே அமைந்திருக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைந்திருக்கிறது. அடஞ்சூர் என்ற கிராமத்திலிருந்து போர்வெல் மூலம் தண்ணீர் உறிஞ்சு எடுக்கப்பட்டு, பைப்லைன் வழியாக இந்த நீர்த்தேக்கத்தொட்டிக்கு கொண்டு வரப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

தற்போது, தேர்தல் நேரத்தில் அதுவும் கோடை வெயிலின் தாக்கத்திற்கு மத்தியில் ஒரு வார காலத்திற்கும் மேலாக முறையாக குடிநீர் விநியோகம் இன்றி கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இதில் கொடுமையான விசயம், அதே கிராமத்திலிருந்து வெறும் 100 மீட்டர் தொலைவில் வெண்ணாறு ஓடுகிறது என்பதுதான். ஆட்சி பொறுப்பேற்கும் புதிய அரசாவது இப்பிரச்சினையை உரிய முறையில் அணுகி வெண்ணாற்றிலிருந்து குடிநீர் விநியோகிப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதே இம்மக்களின் எதிர்பார்ப்பாக அமைந்திருக்கிறது.

—   தஞ்சை க.நடராசன்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.