திருச்சியில் அரசு வழக்கறிஞர் பெயரில் உலா வந்த டுபாக்கூர் கைது..
திருச்சியில் அரசு வழக்கறிஞர் பெயரில் உலா வந்த டுபாக்கூர் கைது..
திருச்சி செஷன் கோர்ட் காவல் நிலையத்தில் நேற்று 15/07/2021 வழக்கறிஞர் கங்காதரன் தலைமையிலான வழக்கறிஞர்கள் சிலர் புகார் ஒன்று அளித்துள்ளனர். அதில் பீம நகரை சேர்ந்த முகமது இஸ்மாயில் எனும் நபர் தன்னை வழக்கறிஞர் என்றும், அரசு தரப்பு வக்கீல் என்றும் கூறிக்கொண்டு காவல் நிலையங்களில் பஞ்சாயத்து பேசுவது, அதிகாரிகளை மிரட்டுவது மாய் இருந்து வந்துள்ளார் விட்டார்.
சமீபத்தில் தனக்கு இரண்டாவது திருமணம் செய்துகொள்ள பெண் பார்ப்பதற்காக சில இடங்களில் கூறி வந்துள்ளார். அதன்மூலம் பெண் வீட்டார் வழக்கறிஞர் என்றதால் திருச்சி வழக்கறிஞரான கங்காதரன் அவரிடம் விசாரித்துள்ளனர். அதற்கு வழக்கறிஞர் கங்காதரன் நீங்கள் கூறும் இஸ்மாயில் என்ற அரசு வழக்கறிஞர் பீமா நகர் பகுதியில் இருந்தார்.
ஆனால் அவர் தற்போது கும்பகோணத்தில் பணியாற்றி வருவதாகவும் மேலும் நீங்கள் சொல்லும் நபர் இல்லை என்று கூறியுள்ளார். பிறகு அந்த சந்தேகத்திற்குரிய நபர் யாரென்று வழக்கறிஞர்கள் விசாரிக்க ஆரம்பித்த போது வழக்கறிஞர் தகுதி பெறாத ஒரே ஆசாமி என்றும் அந்த ஆசாமி பெயர் முகம்மது இஸ்மாயில் என்பதால் ஏற்கனவே உள்ள அரசு வழக்கறிஞர் பெயரை பயன்படுத்தி பல இடங்களில் கட்ட பஞ்சாயத்து செய்வது, பணத்தை சுரண்டுவது என்பதுமாய் இருந்து வந்துள்ளார்.
மேலும் திருச்சியில் பிரபல பர்னிச்சர் கடையில் பல ஆயிரம் மதிப்பிலான பொருட்களை பணம் கொடுத்து வாங்காமல் தான் அரசு வழக்கறிஞர் என்று கூறிவிட்டு அனைத்தையும் சுருட்டிக் கொண்டு வந்ததாக புகார் எழுந்து வருவதாக கூறப்படுகிறது.
இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் வழக்கறிஞர் பெயரை தவறாக பயன்படுத்தி வந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்துள்ளனர்.
*உஷார் திருச்சி மக்களே உஷார்.. இஸ்மாயில் என்னும் பிராடு ! ..*
அதன் அடிப்படையில் போலீசார் சம்பந்தப்பட்ட முகமது இஸ்மாயிலை அழைத்துவந்து விசாரித்ததில் கலாம் அறக்கட்டளை என்று நடத்தி வருவதாகவும், அதன்மூலம் சில பஞ்சாயத்து வழக்குகளை வழக்கறிஞர்களை கொண்டு சரி செய்து பணம் சம்பாதித்து வந்ததாக கூறியுள்ளார். மேலும் நாளடைவில் தன்னை வழக்கறிஞர் என்று கூறி வலம் வந்ததாக கூறியுள்ளார். அதற்குரிய அடையாள அட்டைகளை தயார் செய்து கொண்டு சுற்றி வந்ததால் தன்னை யாரும் சந்தேகிக்கவில்லை என்றுள்ளார்.
இதன் மூலம் போலீஸார் முகமது இஸ்மாயில் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
–ஜித்தன்