திருச்சி ரயில்வே எஸ்.ஐ- யிடம் வழிப்பறி- குற்றவாளிகளை காப்பாற்றும் போலீஸ்..

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சி ரயில்வே எஸ்.ஐ- யிடம் வழிப்பறி- குற்றவாளிகளை காப்பாற்றும் போலீஸ்..

திருச்சி மத்திய ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை எஸ்.ஐ- யாக பணிபுரிந்து வருபவர் ஆதித்யா, இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது இரவு 2 மணி அளவில் கல்லுக்குழி ரயில்வே மேம்பாலத்தில் காரை இருட்டில் நிறுத்திக்கொண்டு ஐந்திற்கும் மேற்பட்ட மர்ம ஆசாமிகள் சந்தேகிக்கும் படியில் நின்றுள்ளனர்.

Kauvery Cancer Institute App

இதனைக் கண்ட ஆதித்யா சம்பந்தப்பட்ட நபர்கள் யார் என்று அருகே சென்று பார்த்தபோது, கஞ்சா போதையில் இருந்த அந்த கும்பல் ஆதித்யாவை தாக்க முற்பட்டுள்ளனர்.

இதனால் சம்பவ இடத்திலிருந்து ஒதுங்கி வந்து ஆர்.பி.எஃப் அலுவலகம் வந்துள்ளார். அப்போது காரில் பின்தொடர்ந்து வந்த அந்த மர்ம கும்பல் ஆதித்யாவை வழிவிடும் முருகன் கோவில் அருகே மறைத்து பயங்கர ஆயுதங்களால் தாக்க முற்பட்டுள்ளனர்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இதனால் சம்பவ இடத்தில் தனது இருசக்கர வாகனத்தை விட்டு விட்டு அருகில் உள்ள ஆர் பி எப் அலுவலகத்திற்கு சென்று தகவல் தெரிவிக்க சென்றபோது அந்த கும்பல் எஸ்.ஐ ஆதித்யாவின் பைக்கை திருடி சென்றுள்ளனர்.

அங்குசம் டிவி கண்டு களியுங்கள்..

இதுகுறித்து மறுநாள் காலையில் ஆதித்யா கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

அன்றே இந்த கும்பல் பைக்கினை காவல் நிலையத்தில் வந்து ஒப்படைத்துவிட்டு எந்த தப்பும் செய்யாத அதுபோல் சென்றுள்ளனர்.

மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார்தாரரான ஆதித்யா காவல் நிலையத்தில் தெரிவிக்க.. புகார் பெற்றதற்கான சிஎஸ்ஆர் காப்பியை மட்டும் கொடுத்துவிட்டு ஒரு வார காலமாக சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் கண்டோன்மெண்ட் காவல் நிலைய போலீசார் அலட்சியம் படுத்தி வருகின்றனர்.

மேலும் வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களில் ஒரு சட்டக் கல்லூரி மாணவனும் ஈடுபட்டுள்ளதாகவும் அந்நபர் மூலம்தான் பைக்கினை காவல் நிலையத்தில் வந்து ஒப்படைத்ததாக தகவல் வெளிவருகிறது.

ரயில்வே பாதுகாப்பு படை எஸ்.ஐ வழிமறித்து சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்ட நபர்கள் மீது கண்டோன்மென்ட் காவல்துறை இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பது போலீசே குற்றவாளியை காப்பாற்றுவதற்கு சமம்.

ஜித்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.