திருச்சியில் கள்ள லாட்டரி விற்பனையில் காங்கிரஸ் பிரமுகர் கைது..
திருச்சியில் கள்ள லாட்டரி விற்பனையில் காங்கிரஸ் பிரமுகர் கைது..
திருச்சி கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சத்திரம் பகுதியில் பூக்கடை நடத்திவரும் சாஸ்திரி ரோடு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முகிலன் என்னும் நபர் ஆன்லைன் கள்ள லாட்டரி விற்பனை செய்வதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சம்பந்தப்பட்ட நபரை போலீசார் நேற்று 17/07/2021 பிடித்து விசாரணை செய்ததில், திருச்சி மாவட்டம் வாத்தலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கல்லூர் கிராமத்தை சேர்ந்த J.C வாசன் எனும் நபர் கேரளா லாட்டரி மொத்தவிற்பனை திருச்சி மாவட்ட மாநகர பகுதியில் ஆட்களை வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது.
அதன்பேரில் போலீசார் பிடிபட்ட முகிலனை வைத்து வாசனை திருச்சி சத்திரம் பகுதிக்கு வர வைத்து மடக்கிப் பிடித்தனர்.
மேலும் பிடிபட்ட கல்லூர் J.C வாசன் திருச்சி காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தொண்டரணி அமைப்பாளராக பதவி வகித்து வருவது தெரியவந்தது. இவற்றைப் பயன்படுத்தி முக்கிய அரசியல் புள்ளிகள் அனைவரையும் தெரிந்து வைத்துக்கண்டு சிறுகாம்பூர், முசிறி உள்ளிட்ட பகுதியில் வெகு ஜோராக கேரளா கள்ள லாட்டரி விற்பனையை நடத்தி வந்துள்ளார். பெட்டிக்கடை நடத்தி வந்த J.C வாசன் கடந்த 5 வருடத்தில் புல்லட் புதிய அடுக்குமாடி வீடு என்று அபார வளர்ச்சியில் முசிறி வட்டாரங்களில் கொடிகட்டி பறந்துள்ளார்.
அதன்பேரில் போலீசார் மேற்கண்ட இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
–ஜித்தன்