அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அங்குசம் பார்வையில் ‘டியூட்’  

திருச்சியில் அடகு நகையை விற்க

தயாரிப்பு : ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ நவீன் யெர்னேனி & ஒய்.ரவிசங்கர். இணைத் தயாரிப்பு : அனில் யெர்னேனி. டைரக்‌ஷன் : கீர்த்தீஸ்வரன். ஆர்ட்டிஸ்ட் : பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார், ரோகிணி, ஹிருது ஹாரூண், ஐஸ்வர்யா சர்மா, கருடா ராம்,  டிராவிட் செல்வம். ஒளிப்பதிவு : நிகேத் பொம்மி, இசை : சாய் அபயங்கர், எடிட்டிங் : பரத் விக்ரமன், காஸ்ட்யூம் டிசைனர் : பூர்ணிமா ராமசாமி, தயாரிப்பு வடிவமைப்பு : லதா நாயுடு, தமிழ்நாடு ரிலீஸ் : ஏஜிஎஸ் எண்டெர்டெய்ன்மெண்ட்,  பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா & ஏ.அப்துல்நாசர்.

தனது தாய்மாமா பால்வளத்துறை அமைச்சர் சரத்குமாரின் மகள் குறளரசியுடன்[மமிதா பைஜு] சிறுவயதிலிருந்தே பழகியதால் நட்புடன் நேசிக்கிறார் அழகன் [ பிரதீப் ரங்கநாதன்] ஆனால் மமிதாவோ பிரதீப்பை ப்ரபோஸ் பண்ணுகிறார். “உன்மேல 0 % ஃபீலிங் “ எனச் சொல்லி ரிஜெக்ட் பண்ணுகிறார் பிரதீப். இதனால் வெறுத்து பெங்களூருக்குப் போகும் மமிதா அங்கே ஒருவனைக் காதலிக்கிறார்.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

இந்த நேரத்தில் நண்பனின் ஆலோசனையால் மமிதாவைக் காதலிப்பதாக அவரிடம் பிரதீப் சொல்ல, தான் வேற ஒருத்தனைக் காதலிப்பதாக கல்யாண ரிசப்ஷன் அன்று சொல்கிறார் மமிதா. இதனால் அதிர்ச்சியானாலும் தான் நேசித்தவளின் காதலனையே கல்யாணம் பண்ணி வைக்க களம் இறக்குகிறார் இந்த செல்ல ‘டியூட்’ பிரதீப் ரங்கநாதன். இவரின் பிளான் சக்சஸா? ஃபெயிலா?

2கே கிட்ஸை குறிவைத்து களம் இறங்கி, கதிகலக்கியிருக்கிறது டைரக்டர் பிரகதீஸ்வரன் + ஹீரோ பிரதீப் ரங்கநாதன் கூட்டணி. இந்தக் கூட்டணி சொன்ன ஒரே ஒரு சங்கதியால் நாமும் சற்றே கதிகலங்கித் தான் போனோம்.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

அது என்னன்னா மாமா சரத்குமாரை ஏமாற்றுவதற்காக மமிதா பைஜுவின் கழுத்தில் தாலி கட்டுவது மட்டும் தான் பிரதீப் ரங்கநாதன். மற்ற வேலைகளையெல்லாம் பார்த்து மமிதாவை கர்ப்பமாக்குவது அவரின் காதலன் தான். ஆனால் பிள்ளைக்கு அப்பா பிரதீப் ரங்கநாதன். இதையெல்லாம் பார்த்தால்… கேட்டால்… நாம கதிகலங்காம இருக்க முடியுமா? டிஜிட்டல் டீன் ஏஜ்களைக் குறிவைத்து எடுக்கலாம் தான், அதுக்காக தப்பாக குறி வைக்கலாமா பிரதீப் & கீர்த்தீஸ்வரன் ப்ரோ? சரி, இதுக்கெல்லாம் நதி மூலம், ரிஷி மூலம் பார்க்கக் கூடாது.

ஆனா ஒண்ணு நாலாவது படத்தையும் அதிரிபுதிரி ஹிட் கொடுத்து, கோலிவுட்டின் சில ஹீரோக்களை பிரதீப் ரங்கநாதன் கதிகலங்க வச்சுட்டாருங்கிறது மட்டும் உண்மை.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

டியூட்எக்ஸ் லவ்வரின் கல்யாணத்துக்குப் போய் அலப்பரை  பண்ணி, அவரின் தாலியை அறுக்கும் இண்ட்ரோ சீனிலிருந்து க்ளைமாக்ஸ் சீன் வரை பிரதீப் ரங்கநாதனின் ராஜ்ஜியம் தான். “ என்னை பிடிக்கலங்கிறதுக்கு  ஒரே ஒரு காரணம் சொல்லு” என கலாட்டா பண்ணுவது, “சரி பிடிக்காததுக்கு காரணம் பிடிக்காதது தான். இதுக்கு மேல என்ன வேணும்?” என சமாதானம் அடைவது, சண்டையில் சட்டை கிழிந்து ஃபேர்பாடியுடன் காரில் மமிதாவுடன் வரும் போது, “ஏண்டா இந்த உடம்பை வச்சுக்கிட்டு பத்துப் பேரை அடிப்பியா?” என மமிதா கேட்க, “இல்ல, எறநூறு பேரு அடிச்சாலும் தாங்கும் உடம்புடி இது” என கவுண்டர் கொடுப்பது, செல்போன், கூலிங்கிளாஸ், சிகரெட் இதையெல்லாம் ரஜினி ஸ்டைலில் படு ஸ்பீடாக சுழட்டுவது என  வெரைட்டியான பெர்ஃபாமென்ஸில் வெளுத்துக்கட்டுகிறார் பிரதீப் ரங்கநாதன்.

டான்ஸ் & ஆக்‌ஷனிலும் அடுத்த ஸ்டேஜுக்குப் போய்விட்டார். இந்த இடத்தில் இதற்கு முந்தைய பேராவின் கடைசி வரிகளை மீண்டும் படிக்கவும்.

டியூட்மமிதா பைஜு. அடடா……அடடா…ஆஹா…ஓஹோ… அந்தப் புள்ளட்ட அப்படியொரு எக்ஸ்பிரசன். ஃப்ராங்க் இல்ல, நிஜம்னு பிரதீப் சொன்னதும் கண்கலங்கி, நெஞ்சைப் பிடித்தபடி ஸ்லோவாக நடிக்கும் சீன், பிரதீப்புக்கு பெண் பார்க்கும் சீன், அப்பா சரத்திடம் கெஞ்சிக் கதறி, ஒருகட்டத்தில் ‘உன்னால முடிஞ்சத பார்த்துக்க” என ஆவேசமாகும் சீன் உட்பட அவர் வரும் சீன்கள் எல்லாமே கண்கொள்ளாக் காட்சி. அழகும் திறமையும் கூடிவந்து இந்த தேவதையிடம் குடி கொண்டிருக்கிறதுன்னே சொல்லலாம். [ நாமளும் 2கே கிட்ஸ்ங்கிற ஃபீலிங்ல வந்துருச்சு தான். ஆனாலும் தப்பில்லேங்கிறேன்]

அமைச்சராக சரத்தின் வில்லன் முகம் வெளிப்படும் இடம் ரொம்பவே ட்விஸ்ட். சும்மா சொல்லக் கூடாது, லைட் காமெடியிலும் வெயிட் வில்லத்தனத்திலும் வெளுத்துக் கட்டிவிட்டார் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார். பிரதீப்பின் அம்மாவாக ரோகிணி, பிரதீப்பின் நண்பனாக வருபவர், பிரதீப்பின் மாஜி லவ்வராக வருபவர், அவரின் கணவராக வருபவர் என அனைவருமே இந்த ‘டியூட்’க்கு மேட்ச்சாகியிருக்கிறார்கள்.

‘டியூட்’ 100% எண்டெர்டெய்மெண்ட் தான். பட் ஆண்டி சோஷியல் எலெமெண்ட் ஃபார் யூத்.

 

—   ஜெடிஆர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.