துல்கர் சல்மானின் படங்களிலேயே மெகா பட்ஜெட் படம்!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

‘லோகா சேப்டர்-1’ படத்திற்குப் பிறகு தனது ‘வேஃபேரெர் பிலிம்ஸ்’ பேனரில் தனது 40ஆவது படமாக ‘ஐ ஆம் கேம்’-ஐ  தயாரித்துள்ளார் துல்கர் சல்மான். ‘ஆர்டிஎக்ஸ்’ என்ற சூப்பர் டூப்பர்ஹிட் படத்தை டைரக்ட் பண்ணிய நஹாஸ் ஹிதாயத் இப்படத்தை டைரக்ட் பண்ணியுள்ளார். இதில் துல்கருடன் கயாது லோஹர், டைரக்டர் மிஷ்கின், ஆண்டனி வர்கீஸ், கதிர், பாரத் திவாரி, சம்யுக்தா விஸ்வநாதன் ஆகியோர் நடித்துள்ளனர். சஜிர் பாபா, இஸ்மாயில் அபுபக்கர், பிலால் மொய்து ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ளனர். ஆதர்ஷ் சுகுமாரன், ஷபாஸ் ரஷீத், சஜிர் பாபா ஆகிய மூவரும் வசனம் எழுதியுள்ளனர். ஒளிப்பதிவு : ஜிம்ஷி காலித், இசை : ஜேக்ஸ் பிஜாய், எடிட்டிங் : சமன் சாக்கோ, பி.ஆர்.ஓ. :யுவராஜ்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

தென்னிந்தியாவின் நூற்றுக்கும் மேற்பட்ட நகரங்களில் ஷூட்டிங் நடந்துள்ளது. துல்கர் சல்மானின் படங்களிலேயே , இன்னும் சொல்லப் போனால் மலையாள சினிமாக்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படம் ‘ஐ ஆம் கேம்’. சமீபத்தில் துல்கரின் பிறந்த நாளையொட்டி படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் 21-ஆம் தேதி உலகெங்கும் ரிலீசாகிறது ‘ஐ ஆம் கேம்’.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

—  ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.