ஓரம் கட்ட படுகிறாரா பொதுச்செயலாளர் – என்ன நடக்கிறது திமுகவில் !
திமுகவின் பொதுச் செயலாளராக தற்போது இருப்பவர் துரைமுருகன். இவர் கலைஞரின் தீவிர விசுவாசியாக இருந்தவர், மேலும் மு க ஸ்டாலினை தம்பி என்று உரிமையோடு அழைக்கும், திமுகவின் முக்கிய அதிகார மையமாக உள்ளார்.
இந்த நிலையில் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ள நிலையில் முக்கியத் துறை துரைமுருகனுக்கு ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நீர்வளத் துறை துரைமுருகனுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் துரைமுருகன் சிறிய மனவருத்தத்தோடு ஆரம்பத்தில் இருந்தார்.
வீடியோ லிங்
அதேநேரம் துரைமுருகனின் கரடுமுரடான பேச்சால் திமுகவினர் மட்டுமல்லாது, கூட்டணி கட்சியினரையும் சில நேரங்களில் முகம் சுளிக்க வைக்கும், கோபக்காரர், வேலூர் மாவட்டத்தின் அதிகார மையம், மணல் மாபியாவான புதுக்கோட்டை எஸ்.ஆர் குரூப்போடு துரைமுருகன் பேசி வருகிறார் என்று அவர் மீது தலைமைக்கு தொடர்ந்து விமர்சனங்கள் வந்த வண்ணம் இருந்தன. அதே நேரத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் உள்ளடி வேலையை முன்னின்று நடத்தியதாக துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் திமுக தலைமை நேரடியாகவே தலையிட்டு துரைமுருகனின் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கியது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுக்கோட்டை எஸ் ஆர் குரூப்பிற்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது உடல் நிலை காரணமாக வீட்டில் இருந்த அரசியல் செய்து வரும் நிலையை பயன்படுத்தி ஓரம் கட்டப்பட்டு வருகிறார் துரைமுருகன் என்று துரைமுருகனின் வீட்டிற்குள்ளேயே பேச்சு ஏழு தொடங்கி விட்டது. இந்தப் பேச்சுகள் எழுந்து கொண்டிருக்கக்கூடிய அதேவேளையில் தருமபுரி பகுதியில் முக்கிய ஆளுமையாக இருந்த அதிமுகவைச் சேர்ந்த பழனியப்பன் திமுகவில் சில மாதங்களுக்கு முன்பு இணைந்தார். இந்த நிலையில் தனது ஆதரவாளர்கள் பலரை இணைக்கும் நிகழ்வை டிசம்பர் 4ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடத்தினார். இதற்கு துரைமுருகனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இப்படி பல கட்சி நிகழ்வுகளுக்கு துரைமுருகனுக்கு அழைப்பு விடுக்கப்படுவதே இல்லை என்று கூறப்படுகிறது.
வீடியோ லிங்..
கட்சியினர் தான் என்னை ஓரம் கட்டு கிறார்கள் என்று நினைத்தால், என் தம்பியும் என்னை ஓரம்கட்டுகிறாரே என்று வருத்தத்தை உள்ளாராம் துரைமுருகன்.