போலீஸ் மகனை வைத்து குற்றவாளி தந்தையை தூக்கிய திருச்சி போலீஸ்- அங்குசம் செய்தி எதிரொலி..
போலீஸ் மகனை வைத்து குற்றவாளி தந்தையை தூக்கிய திருச்சி போலீஸ்- அங்குசம் செய்தி எதிரொலி
சிறுமிகளை கற்பழித்த காமுக தாத்தா வேடிக்கை பார்க்கும் போலீஸ் என்கிற தலைப்பில் அங்குசம் இணையதளத்தில் இன்று 22/04/2021 செய்தி வெளியானது.
அதில் கடந்த மார்ச் 7 தேதி திருச்சி மாவட்டம் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இரண்டு சிறுமிகளின் தாய் ஒருவர், தனது குழந்தைகளிடம் 55 வயதுடைய சிங்காரம் எனும் எதிர்த்த வீட்டு நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அளித்த புகாரின் அடிப்படையில் மார்ச் 24 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும் மேற்கண்ட குற்றம்சாட்டப்பட்ட சிங்காரத்தின் மகன் சுதாகர் முசிறி காவலராக இருப்பதால் அவருடைய பாதுகாப்பில் தலைமறைவாக இருந்த நிலையில் திருச்சி மாவட்ட எஸ்.பி மயில்வாகனன் உத்தரவின் அடிப்படையில் தனிப்படை போலீசார் சுதாகரை வைத்து குற்றவாளியான சிங்காரம் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து இன்று 22/04/2021 கைது செய்தனர்.
மேலும் ஏற்கனவே ஒரு குழந்தை பாதிக்கப்பட்டுள்ளதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது 13 வயது சிறுமியும் பாதிக்கப்பட்டுள்ளார் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றம் புரிந்த தந்தைக்கு அடைக்கலம் கொடுத்த மகன் திடீரென தனது தந்தையை ஆஜர் படுத்திய காரணம் என்னவென்று பார்த்தால்.. தன் தலப்பாவுக்கு ஆபத்து ஆகிடுமோ என்கிற பயத்தில் தானே தனது தந்தையை அழைத்து வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தாராம்.
கடந்த ஒரு மாத காலமாக போலீஸ் தேடிவந்த நிலையில் குற்றவாளியான தந்தையை மறைத்து வைத்து பூச்சாண்டி காட்டி வந்த போலீசாரால் உளவுத்துறை வட்டாரங்களே அதிர்ந்து உள்ளனர்..
-ஜித்தன்