தேர்தல் வியூக வகுப்பாளர் என்பது ஒரு அரசியல் நோய்..

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில்  வியூக வகுப்பாளர் என்ற நோய் அரசியல்வாதிகளை பிடித்து ஆட்டுகிறது. இது ஒரு மாய பிம்பம்.

ஊருக்கெல்லாம் சோதிடம் சொல்லும் சோதிடன் தன்னுடைய வாழ்க்கைக்கு சோதிடம் சொல்ல மாட்டார். ஏனென்றால் சொல்ல முடியாது.

இனிய ரமலான் வாழ்த்துகள்

அதுபோலத்தான் பிரசாந்த் கிஷோர் ஊருக்கு எல்லாம் வியூகம் வகுத்துக் கொடுத்தார். ஆனால் தான் தேர்தலில் நின்று டெபாசிட் பறி கொடுத்தார்.

விஜய்க்கு 18 சதவீதம் 20% என்று ஆருடம் சொல்வது மூட நம்பிக்கைகளில் ஒன்று என்றுதான் நினைக்கிறேன். பந்தயத்திற்கு தயாராகாமல் கொட்டிலில் இருக்கும் குதிரை மீது எவனாவது பணம் கட்டுவாரா.. அது போலத்தான் விஜய்க்கு 18 சதவீதம் வாக்கு என்பது.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

மக்கள் மனங்களை சர்வே எடுப்பது அவ்வளவு எளிது அல்ல..

ஒரு நாள் ஒரே ஒரு நாள் இன்னும் சொன்னால் ஒரு மணி நேரம் கூட போதும் மொத்த கணிப்புகளையும் தவிடு பொடி ஆக்குவதற்கு….. திமுக வென்று விடும் என்று இருந்த ஒரு சூழ்நிலை ஒருநாள் இரவு ராஜீவ் காந்தி படுகொலையால் தலைகீழாக மாற்றிவிட்டு திமுகவை ஜீரோ ஆக்கியது. தேர்தல் களம் என்பது இப்படித்தான்.

உங்கள் விளம்பரம் இலட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைய....

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

வியூக வகுப்பாளர் ஒரு தலைவர் எப்படி மக்களை அணுகலாம், எந்தெந்த விஷயங்களை உயர்த்திப் பிடிக்கலாம் , எந்தெந்த மேனரிஷம் பின்பற்றலாம் போன்ற சில வழி காட்டுதல்களை தரலாமே தவிர வாக்குக்கு உத்தரவாதம் தர முடியாது.

தேர்தல் வியூக வகுப்பாளர்
தேர்தல் வியூக வகுப்பாளர்

எம்ஜிஆர் கலைஞர் ஜெயலலிதா போன்றவர்கள் எந்த வியூக வகுப்பாளரை வைத்துக் கொண்டார்கள் . உரை எழுதித் தருவதற்கு மட்டுமே ஆட்களை வைத்திருந்தார்கள்

ஆகவே பிரசாந்து கிஷோர் அவர்களால் வென்றார் ஆதம் அர்ஜுனா மூலமாக வென்றார் என்று சொல்வது சுத்த ஹம்பக் வியூக வகுப்பாளர் என்பது ஒரு அரசியல் நோய்.. அதிலிருந்து தமிழகம் விடுபட வேண்டும்.

மக்களால் மக்களுடைய மக்களது ஆட்சியாக இருந்தால் இந்த பிரசாத் கிஷோர்கள் தேவை இல்லை.

 

–    ஜெயதேவன் -எழுத்தாளர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.