மகளிருக்கான அதிகாரம் சமஉரிமை மற்றும் பகுப்பு ! புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் கருத்தரங்கு !
மகளிருக்கான அதிகாரம் சமஉரிமை மற்றும் பகுப்பு ! புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கு ! “மகளிருக்கான அதிகாரம், சமஉரிமை மற்றும் பகுப்பு” எனும் தலைப்பில் கடந்த ஆகஸ்டு – 14 அன்று புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் கருத்தரங்கம் நடைபெற்றது.
புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியின் வணிகவியல் துறையும் திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தின் மகளிர் துறையும் இணைந்து நடத்திய இக்கருத்தரங்கை கல்லூரியின் தலைவர் பொன்.பாலசுப்பிரமணியன், கல்லூரி செயலர் பொன்.ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையேற்று தலைமை உரை நிகழ்த்தினார்கள்.
கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர்.குல.தி.தமிழ்மணி மற்றும் கல்லூரி சுயநிதி பிரிவு ஒருங்கிணைப்பாளர் முனைவர்.M.மீனாட்சிசுந்தரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
வணிகவியல் துறை தலைவர் முனைவர் T.காயத்ரி வரவேற்புரை நிகழ்த்த, இக்கருத்தரங்கின் சிறப்பு விருந்தினரை வணிகவியல் துறை உதவி பேராசிரியர் மற்றும் விழாவின் ஒருங்கிணைப்பாளர் முனைவர்.கோ.பாலசுப்பிரமணியன் அறிமுகப்படுத்தினார்.
இக்கருத்தரங்கில் பங்கேற்று பேசிய பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிர் பயிற்சிகள் துறை தலைவர் முனைவர். N.முருகேஸ்வரி , “பெண்கள் பல சவால்களைக் கடந்து இன்று அனைத்து துறைகளிளும் தங்களது பங்களிப்பினை அளித்து நம் இந்திய திருநாட்டின் பெருமையை நிலைநாட்டி வருகின்றனர்.
அனைவரும் சுய ஒழுக்கத்தை கடைபிடித்து அடைய வேண்டிய குறிக்கோளை மனதில் நிறுத்தி அதனை நோக்கி பயணிக்கும் பொருட்டு பெண்களாகிய நாம் முன்னேற்றம் அடைய நாட்டையும் முன்னேற்ற முடியும்” என்றார்.
நிறைவாக, வணிகவியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் I.சுமதி நன்றியுரை வழங்கினார். இக்கருத்தரங்கில் புலத்தலைவர்கள், துறைதலைவர்கள், பேராசிரியர்கள், ஆசிரயரல்லா பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். கருத்தரங்கிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் உதவி பேராசிரியர் முனைவர்.ஆ.பிரபு சிறப்பாக செய்திருந்தார்.