செம்மொழிநாள் விழாவை முன்னிட்டு 11, 12ஆம் வகுப்பு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப்போட்டிகள்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளான சூன் 3 அன்று செம்மொழி நாள் விழாவாக 2025ஆம் ஆண்டு கொண்டாடப் பெறவுள்ளது.  ‘தமிழுக்கு செம்மொழித் தகுதி பெற்றுத்தந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெருமையைப் போற்றிடும் வகையில் அவர் பிறந்த நாளான சூன்த்  திங்கள் 3ஆம் நாள் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் செம்மொழிநாள் விழாவாகக் கொண்டாடப்படும்”.

செம்மொழியின் சிறப்பையும் முத்தமிழறிஞரின் தமிழ்த்தொண்டின் பெருமையையும் மாணவர்களிடம் உணர்த்திடும் வகையில் ஆண்டுதோறும் அனைத்து மாவட்டங்களிலும் 11, 12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தி 03.06.2025ஆம் நாளன்று நடைபெறவுள்ள செம்மொழிநாள் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப்பெறுவர். மாவட்ட மற்றும் மாநில அளவில் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டி தொடர்பான விவரம் பின் வருமாறு:-

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

11, 12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் ஃ கல்லூரி மாணவர்களுக்கான மாவட்டப் போட்டிகள்:

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் 09.05.2025 வெள்ளிக்கிழமை அன்று திருச்சிராப்பள்ளி, தெப்பக்குளம் பிஷப்ஹீபர் பள்ளியிலும்  கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் 10.05.2025 சனிக்கிழமை அன்று திருச்சிராப்பள்ளி பிஷப்ஹீபர் கல்லூரியிலும் நடைபெறும்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

இப்போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவர்கள் விண்ணப்பப் படிவங்களைத் தமிழ் வளர்ச்சித் துறையின் https://tamilvalarchithurai.tn.gov.in.  இணைய முகவரியில் பதிவிறக்கம செய்து அல்லது திருச்சிராப்பள்ளி, தமிழ் வளர்ச்சித் துறை, துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரடியாகப் பெற்று பள்ளி மாணவர்கள் தலைமையாசிரியரின் பரிந்துரைக் கடிதத்துடனும், கல்லூரி மாணவர்கள் முதல்வர் ஃ துறைத்தலைவரின் பரிந்துரைக் கடிதத்துடனும் 05.05.2025ஆம் நாளுக்குள் நேரில் விண்ணப்பிக்க வேண்டும்.

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான போட்டிகள்பள்ளிப் போட்டிகளில் அரசு, தனியார், பதின்ம, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் மத்திய இடைநிலைக் கல்விவாரியம் (CBSE) பயிலும் மாணவர்கள்  அனைவரும் பங்குபெறலாம்.கல்லூரிப் போட்டிகளில் கலை மற்றும் அறிவியல், கல்வியியல், பொறியியல், பல்தொழில்நுட்பம், மருத்துவம், சட்டம், வேளாண்மை உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரியில் பயிலும் மாணவர்கள்  அனைவரும் பங்குபெறலாம்.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

காலை 9.30 மணிக்குப் பேச்சு, கட்டுரைப் போட்டிகள் தொடங்கப்பெறும். போட்டிக்கான தலைப்புகள் போட்டியின் போது அறிவிக்கப் பெறும். ‘செம்மொழியின் சிறப்பு மற்றும் முத்தமிழறிஞர் கலைஞரின் தமிழ்த்தொண்டின் பெருமை” தொடர்புடைய தலைப்புகள் அளிக்கப்பெறும்.

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான போட்டிகள்போட்டிகளில் பங்குபெறும் மாணவர்கள் அனைவருக்கும் தேநீர், மாச்சில், மதிய உணவு மற்றும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பெறும். மாவட்டப் போட்டிகளில் முதல் பரிசுபெறும் மாணவர் 17.05.2025 அன்று சென்னையில் நடைபெறும் மாநிலப் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பினைப் பெறுவர். அதில் முதல் மூன்று பரிசு பெறும் பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கு 03.06.2025 அன்று நடைபெறும் செம்மொழி நாள் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப் பெறுவர்.

பரிசு விவரங்கள் (பள்ளி / கல்லூரி)

பரிசு மாவட்டப் போட்டி மாநிலப் போட்டி

 

  கட்டுரை பேச்சு கட்டுரை பேச்சு
முதல் பரிசு 10,000/- 10,000/- 15,000/- 15,000/-
இரண்டாம் பரிசு 7,000/- 7,000/- 10,000/- 10,000/-
மூன்றாம் பரிசு 5,000/- 5,000/- 7,000/- 7,000/-

 

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மேற்கண்ட போட்டிகளில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ / மாணவியர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம்  என  திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப்குமார்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.